Thursday 25 February 2016

விசாரணை - விமர்சனம்

விசாரணை -
சூதாடி திரைப்படத்துக்காக தனுஷும் வெற்றி மாறனும் மீண்டும் இணைகின்றனர் என்று தெரிந்தவுடன் ..இன்னொரு ரா பிலிம் ரெடி டா என்று காத்திருந்தேன் ..அனால் இடையில் தனுஷின் அனுமதியுடன் வெற்றிமாறன் ஒரு ஆவணப்படம் இயக்குறார் என்றதும் எதிர்பார்ப்பு கலைந்த சோகம் ஒருபுறம் இருந்தாலும் அது என்ன படம் என்று ஆவலை கிளப்பிய படம் .. அதுவும் வெனிஸ் திரைபட விழாவில் இட்டாலியன் அவார்ட் வென்றதும் எப்படா இங்க ரிலீஸ் ஆகும் என்று காத்து கிடந்த படம் ... ஐநாக்ஸ் மூவீஸ் ல் டிக்கெட் கிடைத்தவுடன் என்னால் என் டிக்கெட் யெ நம்ப முடியவில்லை ... இது என்னோட லக் கா...இல்ல விசாரணை படத்துக்கு வந்த சோதனை யா என்று ஒரு டவுட் டில் சீட் தேடி உட்கார்ந்தேன் ..
09: 50 படம் ஆரம்பித்தது .. 09: 57 பொட்டில் ஓங்கி அறைந்தார் போல் ஒரு பக்கட் அடியுடன் வெற்றி மாறன் தனது அதகளத்தை ஆரம்பித்தார் ..ஒரு பாட்டு இல்லை இன்றோ இல்லை ...படம் ஆரம்பித்த 7 நிமிடங்களில் கதையின் தீவிரத்தை உணர்த்திய முதல் தமிழ் திரைபடம் ..விசாரணை
...
" பேர் என்ரா.".
" அப்சல் சார் "..
"அல்கொய்தாவா "..
"இல்ல சார்...தமிழ் நாடு சார் "
" ஒ.. எல்.டி.டி.யி ஆ ? "
" இல்ல சார் ..தமிழ் சார். ".
" எல்லா தமிழும் எல்.டி.டி.யி தாண்டா... ஜீப்ல ஏறு"
என்ன உணர்வென்று புரியவில்லை ..ஏன் ஒரு துளி கண்ணீர் மடக் என்று வந்தது என்று தெரியவில்லை இந்த டயலாக் கை கேட்டவுடன் கையை தட்டினேன் ..என்னால் சொல்ல முடியாததை எங்கள் வெற்றி மாறன் உரக்க சொல்கிறார்..
அடுத்து இசை .. ஜி.வி யும் அந்த நால்வருடன் சேர்ந்து படம் முழுதும் பயணிக்கிறார் .. முதலில் சொன்ன அந்த பக்கட் அடியில் ஆரம்பிக்கும் பிளாக் தீம் இசை , கடைசி என்கவுண்டர் வரை பக்கத்துக்கு சீட்டில் உட்கார்ந்து நம்முடன் பயணிக்கிறது .. அடுத்து தினேஷ் மற்றும் நண்பர்கள் ..யாரை பாராட்டினாலும் அது இவர்கள் அனைவருக்கும் போய் சேரும்.. அத்தனை அடி , உரி , மிதி வாங்கியும் ,உயிர் போகும் வலியிலும்,,நாங்க திருடல சார் என தினேஷ் சொல்லும் இடம் அட்டகாசம் .
அடுத்து வெற்றி மாறன் .
கடை திறந்தவுடன் ஓடி வரும் நாய் குட்டிகள் , பிரசாதம் கொடுத்து அடியை துவக்கும் அந்த போலீஸ் , நய வஞ்சகத்தின் மொத்த உருவமான போலீஸ் ஏட்டையா உயிரை பற்றி தத்துவம் பேசுவது ,இந்த பாடி தற்கொலைக்கான பாடியே இல்லை ..அடுத்த தடவை சரியாய் செய்ங்க சார் என அலுத்து கொள்ளு ம் போலீஸ் ..சார் வீட்டை கழுவி விட்டால் நம்மளை சுட மாட்டார் என செல்லும் அப்சல் .என ஒவ்வொரு காட்சியுளும் அற்புதம் ...
அத்தனை அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டு சத்தமில்லாமல் கடைசியில் பேர் போடும் இரண்டு கலைஞர்கள் ..ஒன்று பாலா ..இன்னொன்று வெற்றி மாறன் ...அனால் கடைசியில் லாக் அப் நாவல் எழுதிய சந்திர குமார் அவர்களுக்கு க்ரெடிட் கொடுத்து , பிறகு தன பேர் காட்டியதில் ஈடு இணை இல்லா கலைஞன் ஆகிறார் வெற்றி மாறன் , இரவோடு இரவாக காமிரா யாருக்கும் தெரியாமல் போலீஸ் ஸ்டேஷன் க்குள் நுழைந்ததை போன்ற ஒரு இயக்கம் .அட்டகாசம் வாங்கும் ஒவ்வொரு அடியின் வலியும் பார்வையாளனை சத்தமில்லாமல் கண்ணீர் சிந்த வைத்ததில் உலக சினிமா ரசிகர்கள் அத்தனை பேரும் தனி தனியாய் கட்டி பிடித்து வாழ்த்து சொல்ல வேண்டியவர். வெற்றிமாறன்.
இவர்கள் மாட்டியதை போல் நாம் எப்போது வேண்டுமனாலும் மாட்டலாம் என்று பார்வையாளன் நெஞ்சு குழியில் ஒரு பயத்தை இறக்குகிறது விசாரணை..


--
ஹரி 

No comments:

Post a Comment