கடந்த பதிவிற்கு அமோக ஆதரவு தந்து ..இதோட போதும் ராசா.. இதுக்கு மேல வேண்டாம் என்று கத்தி கதறி கண் கலங்கி என்னை என்றும் ஊக்கு விக்கும் ( ஊக்கு வித்தியா ..எப்ப ) என் நண்பர்களுக்கு நன்றி ...அது ஏன் நு தெரியல.. சின்ன வயசுல இருந்தே நமக்கு இந்த விளங்காத மர்மங்கள் , ஏலியன் பயலுக, பேய் கதை, பிசாசு கதை ந ஒரு ஆர்வம் , எப்ப வீட்டுல கரண்ட் போனாலும் நம்ம கூட்டிஉட்கார வைச்சு இந்த மாதிரி எதாவது கதையா சொல்ல சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க ( அரம்பிசுடண்டா.சாமி ).. நானும் நம்ம கூகுள் ஓட தம்பி கோகுல் மாதிரி சும்மா அளந்து விடுவேன் ... எல்லாரும் சிரிச்சி , கத்தி கதறும் போது கரண்ட் வந்திரும் ( சில சமயம் , எல்லாரும் போனதும் யாரோ நைட் பூரா சிரிசிட்டே இருக்கிற சத்தம் கேக்கும் )..
அப்ப அரன்பிசது தான் இந்த அறிவியலும் அமானுஷ்யமும்..பொதுவாக நாம் எல்லா நிகழ்வுகளையும் பார்த்தவுடன் அல்லது படித்தவுடன் நம்பி விடுவதில்லை..அதற்கான ஆதாரம் அல்லது காரணத்தை தேடுகிறோம்.இரண்டுமே கிடைக்கவில்லை எனில் .இதெல்லாம் கட்டு கதைகள் .அல்லது போலியான உருவாக்கப்பட்டவை என முடிவு செய்கிறோம் ..ஆனால் நம் அறிவிற்கும் எட்டாத நிகழ்வுகள் பூமி தோன்றிய காலம் முதல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன..இதை நாம் இயற்கை ,ஒரு சக்தி, கடவுள்,என நமக்கு வசதியான வகையில் புரிந்து கொள்ளுகிறோம் .. ஏன் நம் அறிவால் பிக் பேங் தியரி வரை தான் நெருங்க முடிந்தது .. இது 1000 பக்கங்கள் உடைய புத்தகத்தின் ஒரு புள்ளியை கண்டு பிடித்ததற்கு சமம் எனலாம்..(இப்ப என்னதான் சொல்ல வர்ற ) யாரவது நம்ம கிட்ட உலகம் எப்படி வந்தது நு கேட்டா..நம்மளும் கமல் சார் மாறி , உலகம் என்பது ஒரு மைய புள்ளியிலோ அல்லாத மனித புள்ளியிலோ , தனி மனிதம் சாராத, தீவிரவாதம் இல்லாத , இன்னும் சரியாய் சொல்ல வேண்டுமானால் ( என்னது இன்னுமா னு ஒடுருவாங்க )அதனால நடந்து முடிஞ்ச இதை எல்லாம் விட்டுட்டு இப்பவும் நம் முன் அமானுஷ்யத்தின் ஆதாரமாய் , நம் அறிவிற்கு புலபடாமல் இன்றும் மர்மங்களாக இருக்கும் விசயங்களை இந்த தொடரில் பாப்போம் ( என்னது தொடரா..செத்தம்டா) பார்ப்போம்...
நாம சின்ன வயசுல படம் வரயிறேன் னு சும்மா டாவின்சி ரேஞ்சு கு பீட்டர் விட்டுட்டு கடைசில நாலஞ்சு கோட்ட அங்கிட்டும் இங்கிட்டும் கிறுக்கி வைப்போம் ..அதுக்கே பென்சில் சரில, பேப்பர் குவலிடிய இல்ல னு சீன போடுவோம் .. ஆனா நமக்கு மேல இருக்கும் சக்தி .அது கடவுளோ , இல்ல ஏலியனோ (இலியானா இல்ல ) இந்த உலகத்தின் மீது வரைந்த ஓவியங்கள் இன்னும் இருக்கு .. அது தான் Nazca lines.
உதாரணத்திற்கு இப்போது சென்னையின் ஒவ்வொரு இடத்தலும் மண்ணை தோண்டி , முதலின் கோடுகளை ஏற்படுத்தி , மொத்த சென்னையின் ஒவ்வொரு பகுதிகளிலும் இதே போல் ஏற்படுத்திய கோடுகளை ஒரு புள்ளியில் இணைத்து மிக நேர்த்தியாக ஓவியம் வரைந்தால் .. அது வான் வெளி யில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியுமானால் .... சொல்லுங்கள் இப்போது இருக்கும் விஞ்ஞானத்தில் இது சாத்தியமா .. சாத்தியம் எனில் எத்தனை காலம் , எத்தனை உழைப்பை அந்த ஓவியம் ஏற்கும் ... ஆனாலும் அது கச்சிதமாக (பெர்பெக்ட்) இருக்குமா என்பது சந்தேகம் தான் .. ஆனால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்திருகிறது
.
ஒன்றல்ல, இரண்டல்ல, 50 கும் மேற்பட்ட சித்திரங்கள், முறையான கோடுகள் , இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்... சித்திரங்கள் மூன்று விதமான வகைகளில் உள்ளன ..1.நேர் கோடுகள். 2.கேத்திர கணித (Geometry) முறையிலான வடிவங்கள்.
3.விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.
3.விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன. நாம் பெரு சென்றாலும் இந்த ஓவியங்களை வானில்பல கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும் ..
இது வரை நடந்த ஆராய்ச்சிகள் எதுவும் ஒரு உறுதியான , முழுமையான முடிவை தரவில்லை என்றாலும் மனிதர்களால் இது சாத்தியமே இல்லை என நிரூபிகபட்டு இருக்கிறது ..
எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று தனது chariots of the gods book ல் கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.
இந்த நேர்தியான உருவங்களை , கோடுகளை இவ்வளவு அழகாக , நேர்த்தியாக உலக பந்தின் மீது வரைந்தது யார் ,
நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ..இது மனிதர்களா , இல்லை மனிதனை மீறிய சக்தியா என்று ..
மீண்டும் சந்திப்போம் ....
அன்புடன்
ஹரி.
அன்புடன்
ஹரி.
No comments:
Post a Comment