Friday 28 November 2014

ஆன்சைட் அனுபவங்கள் - கடைசி பாகம்


எப்படியோ அடிச்சு பிடிச்சு ஆன்சைட் வந்தாச்சு, இப்ப அந்த ஆன்சைட் ஊருல நம்ப ரொம்ப காமென்-ஆ சந்திக்கிற சிக்கல்கள் என்னான்னு பார்போம்.


ஏர்போர்ட்ல நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விஷேசம், இல்லேனா குஷ்டந்தான்..திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான்..அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எருமை மாடு தெரியப்போகுது..) தட்டுத்தடுமாறி கேப் புடிச்சு நம்ப கலீக்கோடா ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட ஐக்கியமாயிர வேண்டியது தான்.


ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:

** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனெக்ஷனோட ஒரு லேப்டாப்.
நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம், நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான். சாயங்காலம் வந்தோடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத் துனு உக்காந்திர வேண்டியது தான்.
அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:

1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்....

நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறான், கால்ல பட்டாவே.. பத்துதடவ தொட்டு கும்புடுவான்.ஆனா அங்க பேப்பரை வேற எதுக்கோ யூஸ் பண்ணுவான் வெள்ளைகாரன்.

நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,

“அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”....
பொன்னி அரிசிலேருந்து முருங்கைக்காய் வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும்.ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறதா தவிர எல்லா வேலையும் துல்லியமா செய்வான்! வேற வழி?

நம்புடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திரும் குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக. ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக. பசங்க நாலு பேரு ஒரு வீட்ல இருந்தா கூட, ஒரே அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது எரியும். சரி, பிரச்சன திசை மாறுது…


அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்லலே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா பனியில நனைஞ்ச புஷ்பம் மாதிரி” ன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட வெள்ளைகார தேவதை நல்ல பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்…  சுறா படத்த IMAX ல பார்த்த மாதிரி அலறி அப்பறமாதான் அடங்குவான்…

வெள்ளக்காறன பொருத்தவர ஒவ்வொரு வீக்எண்டும் தீபாவளி மாதிரி..திங்கக்கெழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா இருப்பானுக.. வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக. 5 மணியில இருந்தே அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்பு வாங்க…வேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.

நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே “அதுங்க வந்திருச்சுன்னு” ஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்க…இங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும்..இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!


இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு வாரத்துக்குத்தான்.. அப்புறம் எவனும் யாரையும் கண்டுக்க மாட்டேன்றான்..அம்மா உணவகம் இல்ல ..பாய் கட பிரியாணி இல்ல .. பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிரும். நாம ஊருக்கு திரும்பிப்போற நாள பத்தி கற்பனை பண்ண ஆரம்பிசிருவோம்.


கிட்ட தட்ட நம்ப வந்த வேலை பாதி முடிசிருக்கும். அதுக்குள்ள தம்பி நீ ஆணி புடுங்குன வரைக்கும் போதும், பட்ஜெட் மேல ஏறுது, நீ ஊருக்கு திரும்பி வான்னு சொல்லி வர சொல்லிருவாங்க. அப்பிடியே அந்த கடைசி வீக் என்டுல அந்த ஊருல இருக்குற பெரிய ஷாப்பிங் மால் போய் நம்ப வீட்டு ஆளுங்களுக்கு தேடி தேடி வெளிநாட்டு பொருள்களை (சென்ட், வாக்மேன், ஐ-பேட்) எல்லாம் வாங்கிட்டு சந்தோஷமா ஊருக்கு கிளம்புவோம். எப்படி இந்த ஊருக்கு வரும் போது மனசு சந்தோஷமா இருந்திச்சோ அத விட பல மடங்கு சந்தோஷம் நம்ப சொந்த ஊருக்கு போகும் போது இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்திச்சு. கடைசியில ப்லைட் நம்ப ஊருல லேன்ட் ஆகும் போது கிடைக்கிற திருப்தி இருக்கே. அதையும் அனுபவிக்கணும்.


ஆன்சைட்ன்றது இளைய தளபதி விஜய் படம் மாதிரி, தியேட்டர் உள்ள இருக்குறவன் வெளிய வர பார்ப்பான்,  வெளிய இருக்கறவன் தியேட்டர் உள்ள போகனும் பார்ப்பான். படத்தோட டிரைலர் மட்டும் தான் நல்லா இருக்கும். புல் படத்தை நீங்க ரொம்ப ரொம்ப கஷ்ட பட்டு தான் பார்க்கணும்.... அது.


கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.


3 comments: