Wednesday 20 April 2016

Batman v Superman: Dawn of Justice - Review

இந்த வருஷத்தோட மிக எதிர்பார்க்க பட்ட படங்கள் ல இதும் ஒன்னு ..அதுவும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு திருவிழா மாதிரி.. பேட்மேன் ரசிகர்கள் ஒரு பக்கம் ..சூப்பர்மேன் பயபுள்ளக ஒருபக்கம் னு எதிர்பார்ப்பு சும்மா நம்ம ஊரு எலக்சன் ரேஞ்சு கு எகிறி இருந்தது.. ட்ரைலர் எ பார்த்த வுடனே சிலிர்த்து போய் சில்லறையை சிதரவுட்ட்டாங்க ரசிகர்கள் ...பட் ..அத்தனைக்கும் ஆப்பு வைச்ச மாதிரி ஒரு திரைகதையினால் 100 சதவிகிதம் தரமான காட்டு மொக்கையாக வந்துள்ளது ...

Man of Steel தொடர்ச்சியாக கதை தொடங்குது .. ஜெனரல் ஜாட் கும் சூப்பர்மேன் கும் நடந்த சண்டையில தின தந்தி ல வர்றமாதிரி பெரும் பொருட்சேதம் ம் உயிர்சேதம் கோதம் நகரத்துல ஏற்படுது, சூப்பர்மேன் நல்லதே பண்ணாலும்அதுக்கு பின்னாடி ஏற்படற இழப்புகள் கண்டு கடுப்பாகிறார் பேட்மேன் அங்கிள்... ஆமா அன்னாருக்கு இதுல வயசு 40+ , இருபது வருசமா இரவும் நைட்டுமா (ஆமா , பகல் ல தான் Bruce Wayne ஆச்சே ) கட்டி காத்த மக்கள் ..இரண்டு மாசம் முன்னாடி வந்த சூப்பர்மேன் னால் பாதிகபட்ரத பார்த்து வெகுண்டெழுந்து , கோபமாய் போய் சூப்பர்மேனிடம் அடிவாங்கி ரத்தம் கக்குறார்.. அப்படியும் தந்திரமா சூப்பர்மேனை புடிச்சு அவரை கொல்ல போகும் போது தான் ஸ்டோரி ல ட்விஸ்ட்டே ....சூப்பர்மேன் சொல்றார்
" அண்ணே , என் அம்மா மார்த்தா வை காப்பாத்த தானே உன்னை அடிச்சேன் "
" எதுக்குடா என் அம்மா பேரை நீ சொல்ற "
" என்னது உங்க அம்மா பேரு மார்த்தாவ , என் அம்மா பேரும் மார்த்தா தான்னே , என்னை கொல்ல போறியா..கொல்லு..
ரெண்டு பேரோட ஆத்தா பேரும் மார்த்தா னு தெரிஞ்ச வுடனே , குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர் மாதிரி கனிவுள்ளம் கொண்ட பேட்மேன் கிளம்பி போய் சூப்பர் மேனோட அம்மாவை காபாத்துறார், இதுக்குள்ள அந்த அம்மாவை கடத்தி வச்ச வில்லன் லூசு பய லூத்தர், ஹல்க் க விட பல்க் க ஒரு மான்ஸ்டர் அவுத்து விட்டுறான்..
என்ன அடிச்சாலும் பாத்ரூம் கரப்பான் பூச்சி மாதிரி திரும்பி திரும்பி வருது அந்த மான்ஸ்டர்..இப்படி இது வரைக்கும் மொக்க போட்டு நம்ம உசுர எடுத்த சூப்பர்மேன், அவரு உசுர கொடுத்து அந்த மான்ஸ்டரை போட்டு தள்றார்....இதுக்கு மேலயும் உசுரோட இருந்த ஆடியன்சே அடிச்சு கொன்றுவாங்கனு நினைச்ச மான்ஸ்டர் அது உசுர துறந்து கதைய முடிச்சு நம்மள காப்பாத்துது...
எங்கே செல்லும் இந்த பாதை பி.ஜி.ம் ல சூப்பர் மேனை பொதைச்சு எல்லாரும் கண்ணீர் சிந்தும் போது எ பிலிம் பை பாலா னு ...சாரி ஜாக் ஸ்னைடர் னு படம் முடியுது

-
ஹரி
Facebook : hari.lifeisfun

Saturday 5 March 2016

கணிதன் - திரைவிமர்சனம்

போலி சான்றிதழ்கள் தயாரிக்கும் நெட்வொர்க் கை கண்டுபிடித்து அழிக்கும் ஒரு ரிபோர்டர் பற்றிய கதை .புதிய கதை களம்..ஆனால். கதையில் இருக்கும் சுவாரசியம் திரை கதையில் இல்லை.. ஒரு சில காட்சிகளை தவிர மற்றவை அனைத்தும் அரத பழசான திரை கதை பார்முலா..பார்த்தவுடன் காதல்..குத்து பாட்டு..அம்மா பாசம் ..வில்லனின் ஆட்கள் அனைவரிடமும் துப்பாக்கி...எல்லா புல்லட் களில் இருந்தும் எஸ்கேப் ஆகும் ஹீரோ..உயிரை கொடுத்து உதவும் நண்பன் என காட்சிகள் Candy Crush Saga விளையாட வைக்கின்றன ..
வில்லனாக முதலில் ஜாக்கி ஷெரப் நடிபதாக இருந்த பின் தருண் அரோர செய்திருக்கிறார் ..இவர் அதர்வா வை கண்டு பிடிப்பது எல்லாம் துப்பாக்கி பட காட்சிகளை நினைவு படுத்துகின்றன ..
எந்த பின்புலமும் இல்லாத, போலி சான்றிதழ் தயாரிக்கும் ஒரு சாதாரண வில்லன் எப்படி இவ்வளவு பேரை சுட்டு கொல்கிறார்.. அதுவும் ஒரு மீடியா சேனல் அலுவலகத்துக்குள் நுழைந்து சுடுவதெல்லாம் ...போங்க சார்...செம காமெடி ....
கணிதன் என்ற பெயருக்கும் , கதைக்கும் ஏன் ஒரு காட்சிக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை ... இசை சிவமணி .. எதிர் பார்த்த மாதிரியே பாடல்களில் காதுகளை கடித்து துப்பி...பின்னணி இசையில் பேண்டேஜ் போடுகிறார்.
மொத்த படமும் காட்டு மொக்கை இல்லை ...போலி சான்றிதழ்கள் தயாரிக்கும் நெட்வொர்க் ..அதனால் பாதிக்கபடும் மாணவர் வாழ்க்கை .. எல்லா டிபர்ட்மெண்டிலும் இருக்கும் போலி பட்டதாரிகள் ..இவர்களின் தவறால் தினம் தினம் ஏற்படும் இறப்புகள் என காட்டிய விதம் கவனம் ஈர்க்கிறது ..முதலில் சொன்ன திராபைகளை தூக்கிவிட்டு இந்த காட்சிகளை இன்னும் குறைந்த நேரத்தில் காட்டி இருந்தால் இந்த படம் ....இன்னொரு தெகிடி.
.

--
ஹரி

Thursday 25 February 2016

விசாரணை - விமர்சனம்

விசாரணை -
சூதாடி திரைப்படத்துக்காக தனுஷும் வெற்றி மாறனும் மீண்டும் இணைகின்றனர் என்று தெரிந்தவுடன் ..இன்னொரு ரா பிலிம் ரெடி டா என்று காத்திருந்தேன் ..அனால் இடையில் தனுஷின் அனுமதியுடன் வெற்றிமாறன் ஒரு ஆவணப்படம் இயக்குறார் என்றதும் எதிர்பார்ப்பு கலைந்த சோகம் ஒருபுறம் இருந்தாலும் அது என்ன படம் என்று ஆவலை கிளப்பிய படம் .. அதுவும் வெனிஸ் திரைபட விழாவில் இட்டாலியன் அவார்ட் வென்றதும் எப்படா இங்க ரிலீஸ் ஆகும் என்று காத்து கிடந்த படம் ... ஐநாக்ஸ் மூவீஸ் ல் டிக்கெட் கிடைத்தவுடன் என்னால் என் டிக்கெட் யெ நம்ப முடியவில்லை ... இது என்னோட லக் கா...இல்ல விசாரணை படத்துக்கு வந்த சோதனை யா என்று ஒரு டவுட் டில் சீட் தேடி உட்கார்ந்தேன் ..
09: 50 படம் ஆரம்பித்தது .. 09: 57 பொட்டில் ஓங்கி அறைந்தார் போல் ஒரு பக்கட் அடியுடன் வெற்றி மாறன் தனது அதகளத்தை ஆரம்பித்தார் ..ஒரு பாட்டு இல்லை இன்றோ இல்லை ...படம் ஆரம்பித்த 7 நிமிடங்களில் கதையின் தீவிரத்தை உணர்த்திய முதல் தமிழ் திரைபடம் ..விசாரணை
...
" பேர் என்ரா.".
" அப்சல் சார் "..
"அல்கொய்தாவா "..
"இல்ல சார்...தமிழ் நாடு சார் "
" ஒ.. எல்.டி.டி.யி ஆ ? "
" இல்ல சார் ..தமிழ் சார். ".
" எல்லா தமிழும் எல்.டி.டி.யி தாண்டா... ஜீப்ல ஏறு"
என்ன உணர்வென்று புரியவில்லை ..ஏன் ஒரு துளி கண்ணீர் மடக் என்று வந்தது என்று தெரியவில்லை இந்த டயலாக் கை கேட்டவுடன் கையை தட்டினேன் ..என்னால் சொல்ல முடியாததை எங்கள் வெற்றி மாறன் உரக்க சொல்கிறார்..
அடுத்து இசை .. ஜி.வி யும் அந்த நால்வருடன் சேர்ந்து படம் முழுதும் பயணிக்கிறார் .. முதலில் சொன்ன அந்த பக்கட் அடியில் ஆரம்பிக்கும் பிளாக் தீம் இசை , கடைசி என்கவுண்டர் வரை பக்கத்துக்கு சீட்டில் உட்கார்ந்து நம்முடன் பயணிக்கிறது .. அடுத்து தினேஷ் மற்றும் நண்பர்கள் ..யாரை பாராட்டினாலும் அது இவர்கள் அனைவருக்கும் போய் சேரும்.. அத்தனை அடி , உரி , மிதி வாங்கியும் ,உயிர் போகும் வலியிலும்,,நாங்க திருடல சார் என தினேஷ் சொல்லும் இடம் அட்டகாசம் .
அடுத்து வெற்றி மாறன் .
கடை திறந்தவுடன் ஓடி வரும் நாய் குட்டிகள் , பிரசாதம் கொடுத்து அடியை துவக்கும் அந்த போலீஸ் , நய வஞ்சகத்தின் மொத்த உருவமான போலீஸ் ஏட்டையா உயிரை பற்றி தத்துவம் பேசுவது ,இந்த பாடி தற்கொலைக்கான பாடியே இல்லை ..அடுத்த தடவை சரியாய் செய்ங்க சார் என அலுத்து கொள்ளு ம் போலீஸ் ..சார் வீட்டை கழுவி விட்டால் நம்மளை சுட மாட்டார் என செல்லும் அப்சல் .என ஒவ்வொரு காட்சியுளும் அற்புதம் ...
அத்தனை அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டு சத்தமில்லாமல் கடைசியில் பேர் போடும் இரண்டு கலைஞர்கள் ..ஒன்று பாலா ..இன்னொன்று வெற்றி மாறன் ...அனால் கடைசியில் லாக் அப் நாவல் எழுதிய சந்திர குமார் அவர்களுக்கு க்ரெடிட் கொடுத்து , பிறகு தன பேர் காட்டியதில் ஈடு இணை இல்லா கலைஞன் ஆகிறார் வெற்றி மாறன் , இரவோடு இரவாக காமிரா யாருக்கும் தெரியாமல் போலீஸ் ஸ்டேஷன் க்குள் நுழைந்ததை போன்ற ஒரு இயக்கம் .அட்டகாசம் வாங்கும் ஒவ்வொரு அடியின் வலியும் பார்வையாளனை சத்தமில்லாமல் கண்ணீர் சிந்த வைத்ததில் உலக சினிமா ரசிகர்கள் அத்தனை பேரும் தனி தனியாய் கட்டி பிடித்து வாழ்த்து சொல்ல வேண்டியவர். வெற்றிமாறன்.
இவர்கள் மாட்டியதை போல் நாம் எப்போது வேண்டுமனாலும் மாட்டலாம் என்று பார்வையாளன் நெஞ்சு குழியில் ஒரு பயத்தை இறக்குகிறது விசாரணை..


--
ஹரி 

இயக்குனர் பாலா - இறுதி சுற்று திரைபடத்தை பற்றி


"மற்ற படங்களைப் பார்க்கும் போது எனக்கு அழுகை வரவில்லை. இப்படத்தைப் பார்த்த போது பல இடங்களில் அழுதிருக்கிறேன். அப்படி ஒரு துல்லியமான உணர்ச்சிகள், திரைக்கதை, எடிட்டிங், நடிகர்களின் நடிப்பு, இசை, எல்லாத்துலயுமே அருமையாக இருந்தது. படமாக எடுக்கும் போது ஏதாவது ஒரு குறை என் கண்ணில் தட்டுப்படும். என் படங்களில் நிறைய குறைகள் தெரியும், இப்படத்தில் குறைகளே என் கண்ணில் படவில்லை. அற்புதமான படம், அதில் சந்தேகமே இல்லை.
இந்த மாதிரியான படங்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்றால் படம் முடிந்து ரோலிங் டைட்டில் முடிவடையும் வரை இருந்து கறுப்பு ஸ்கிரீன் வரும் வரை நின்று மரியாதை செலுத்த வேண்டிய படம் இது.
ரித்திகாவின் நடிப்பு முழுவதுமே சுதாவின் நடவடிக்கைகள் தான். சுதாவின் சுறுசுறுப்பு, துறுதுறுவென இருப்பதை எல்லாம் அந்த பெண்ணுக்கு திணித்து நடிக்க வைத்திருக்கிறாள். மாதவனின் சிறந்த நடிப்பு என்றால் இந்த படம் தான். இடைவேளை காட்சியில் மாதவன் நடித்துவரும் போது எனக்கு எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என தோன்றியது. நல்ல படமாக இருக்கும் என நம்பித்தான் வந்தேன், ஆனால் இவ்வளவு நல்ல படமா என்று மலைத்துப் போய்விட்டேன்.
200, 300 படங்கள் பண்ணிய இசையமைப்பாளர் பண்ணிய பின்னணி இசை போல இருந்தது. நிறைய இடங்களில் வசனம் இல்லை, பின்னணி இசையை சரியாக அமைத்து கொடுத்த சந்தோஷ் நாராயணுக்கு தலை வணங்க வேண்டும்.
நமக்கு ஒரு மொழி கவர்ச்சியும், இனக் கவர்ச்சியுமே உண்டு. 'மில்லியன் டாலர் பேபி' படத்தை விட எனக்கு 'இறுதிச்சுற்று' படம் தான் சிறந்த படமாக தோன்றுகிறது. இயக்குநர் மணி சாருக்கு பெருமை சேர்த்துவிட்டார் இயக்குநர் சுதா. என்னுடன் ஒரு படத்தில் தான் பணியாற்றி இருக்கிறார். இப்படம் பார்க்கும் போது, 5, 6 விஷயங்கள் அந்த பெண்ணிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
பெண் இயக்குநர் என்ற வார்த்தையை உபயோகப்பதே ஒரு பாவம். இயக்குநர்களில் ஆண், பெண் என என்ன இருக்கிறது. 'இறுதிச்சுற்று' படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்குமே இது தான் ஆரம்பச்சுற்று. அடுத்ததாக என்ன பண்ணப் போகிறார்கள் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது"


நன்றி - ஹிந்து தமிழ்


இறுதி சுற்று - விமர்சனம்

ஹாலிவுட் டில் குத்து சண்டையை மைய படுத்தி நிறைய படங்கள் இருந்தாலும் , பெண்கள் குத்துசண்டை யை மையபடுத்தி வந்த மில்லியன் டாலர் பேபி ஒரு அற்புதமான படம் ..தமிழில் அந்த வகையில் ஒரு படம் இல்லையே என்ற குறை இனிமேல் இருக்காது ..இந்திய அளவில் மேரி கோம் திரைபடம் பாக்சிங் ஐ பற்றி இருந்தாலும் அதில் பாக்சிங் செலக்ஷன் ல் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம் , மற்றும் பெண்கள் வாய்ப்புக்காக சகித்து கொள்ள வேண்டிய வரம்பு மீறல்கள் , இணங்க மறுப்பவர்களின் வாய்ப்புகள் தகுதி இருந்தாலும் மறுக்க படுவது ..போன்ற நடப்பு விஷயங்கள் இல்லை ..ஆனால் இவை அத்தனையும் பொளேர் என்று அறைந்தார் போல் வைத்து அதனுடன் மிக அற்புதமாக ஒரு மெல்லிய காதலுடன் இணைத்து வந்திருக்கும் படம் ... இறுதி சுற்று...
சுதா பிரசாத்
மணிரத்னத்தின் உதவியாளராக இருந்து , துரோகி படம் மூலம் தமிழில் அறிமுகம் ..
ஒரு பெண் இயக்குனரிடம் இருந்து இப்படி ஒரு படமா.வாவ் .படம் முழுக்க பெண்ணியம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை ...ஆனால் படம் முழுவதும் சிறு சிறு காட்சிகளில் நம் மனதுக்குள் ஆயிரம் விஷயங்களை சொல்லி செல்கிறார் .மதி ஜெயித்தவுடன் பர்தாவை விலக்கும் பெண்கள்.காட்சி ஒரு உதாரணம்.படத்தின் மிக பெரிய பலம் வசனங்கள் ..அது ஒரு வார்த்தையாக இருந்தாலும் சரி ..பெரி
ய டயலாக் காக இருந்தாலும் சரி ..பொறி பறக்கிறது
மாதவன் - தமிழில் வேட்டை கு பிறகு ஒரு ஸ்ட்ராங் கம் பேக் .. உண்மையில் இதுதான் உண்மையான வேட்டை.. கோபமாக ..மூர்க்கமாக ,,தன்னை பற்றிய விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் , அதே சமயம் அளவு மீறும் போது உறுமி தீர்க்கிறார்..கடைசியாக மதி ஜெயித்தவுடன் ஒரு நிமிடம் கண் கலங்குவது ஆகட்டும்..மாதவனுக்கு மூன்று வருட தவம், இந்த இறுதி சுற்று ...
ரித்திகா சிங்..ம்ம்மா .. இன்னா பொண்ணும நீ .. ..செம பேஜாரா நடிசிகிற அதிலும் ,,மீனு கூவி விகறது ஆவட்டும் ,அப்பால கோச் அடிச்சா வுடனே சிறுத்த மாறி சீறது ஆவட்டும்,,சும்மா கோச் ச கல்லாய்க சொல்ல ..செம மா ..பின்னிட்ட..கட்சில பாக்க சொல்ல அல்லு இல்லை..மாஸ் காட்டிட்ட மதி....
படம் ஆரம்பித்தது முதல் ..கடைசி நிமிடம் வரை பார்வையாளனை தன் வசபடுத்துகிறது ...சந்தோஷ் நாராயண் ன் இசை .. வா மச்சானே பாட்டு செம லைவ்லி ...
எங்கய்ய நம்மாளுக ஜெயிகிறாங்க .. இவங்க எங்க போனாலும் தோகிறது தான் வேலை .. மத்த நாட்டை பாருங்க ..என்னமா ட்ரைன் பண்றானுக ...எப்படி மெடலை குவிகிராணுக என்று எனக்கு இருக்கும் குருவி மூளை யை போல் வைத்து புலம்பி கொண்டு இருக்கும் என்னை போன்றோருக்கு
ஒரு வீரர் அல்லது வீராங்கனை ஜெயிபதற்கு பின்னால் இருக்கும் அதனை வலிகளையும்,அவமானங்களையும். தான் வென்றவுடன் கண்ணீர் மல்க தன் வெற்றியை கொண்டாடும் யாரும் ..உண்மையில் அந்த வெற்றிக்காகவும்,கோப்பைக்காகவும் அழுவதில்லை, தான் கடந்து வந்த அவமானங்களை, வலிகளை, நிராகரிப்புகளை கண்ணீரால் கரைத்தே அந்த அங்கிகாரத்தை பெறுகிறார்கள் என்பதை பார்ப்பவன் நெஞ்சில் அடித்து சொல்கிறது இந்த இறுதி சுற்று .
எவன்ய இனிமே சொல்றது இந்தியாவில் டேலேன்ட் இல்லை னு.. என்ன அது ஏழைங்க கிட்ட இருக்கு.. எப்ப அது வெளி வருதோ ..அப்பால ஒலிம்பிக் ல நாமதன்யா டாப்

-
ஹரி