Saturday 13 September 2014

The Truman Show


1998 ல விஜய் யோட நினைத்தேன் வந்தாய் படம் பார்த்துட்டு , அதே மாதிரி ஒரு கண்ணாடி போட்டுட்டு போய் 8 ம் வகுப்பு பரீட்சை எழுதி பெயிலானது , ஷங்கர் யோட ஜீன்ஸ் படம் பார்க்க தியேட்டர் கு ஜீன்ஸ் போட்டு போய் அவருக்கு பெருமை சேர்கிறது நு அனுபவிச்சு வாழ்ந்த காலம் அது..

அப்பதான் இந்த படம் ரிலீஸ் ஆகி உலக கதாசிரியர்கள்
வாயிலே எல்லாம் ஆவி வர வெச்சது .. அவ்வளவு ப்ரில்லியன்ட் ஸ்க்ரீன் ப்ளே அண்ட் செம கதை இருக்கிற படம் . Fantasy,Fictional,Current Events, Day to day life, Comedy இதெல்லீம் வேற வேற Genre .. ஆனா இதை எல்லாம் ஒரே கலக்கு கலக்கி ,மொத்தமா போட்ட ஒரு முட்டை அம்லேட் தான்  THE TRUMAN SHOW..


இந்த வாழ்க்கை ஒரு நாடகம் , உலகம் ஒரு மேடை , அதில் நாம் எல்லாரும் நடிகர்கள் எத்தனயோ தடவை நாம மொக்கை போற்றுப்போம் , ஆனா அதாங்க இங்க கான்செப்ட்,
நம்ம பாட்டுக்கு, பிரண்ட்ஸ் , கேர்ல் பிரண்ட்,சரக்கு,சைட் டிஷ்,  பேஸ்புக் , மூவி , வேலை அப்புறம் கல்யாணம் , குழைந்தங்க, மளிகை சாமான் , DUE ல கார் னு அப்டியே வாழ்க்கை la தேமே னு போயிடுருப்போம் .. அப்ப திடுர்னு ஒரு நாள் . இதெல்லாமே பொய், நம்ம சுத்தி இருக்கிற எல்லாருமே நடிகர்கள் , அந்த ஊரே ஒரு செட்,  நம்ம WIFE, LIFE எல்லாமே ஒரு ஏமாத்து  வேலை னு தெரிய வந்தா எப்டி இருக்கும் , அப்டியே பிரேம்ஜி ய பெருமாள் வேசத்துல பாத்த மாதிரி மயக்கம் வராது ??


அதாங்க இந்த படத்தோட ஒன் லைன் ஸ்டோரி .. சாரி ..5 லைன் ஸ்டோரி

ஜிம் காரி தான் இந்த படத்தோட ஹீரோ , முதல இந்த ரோல் ராபின் வில்லியம்ஸ் பண்ற மாதிரி தான் இருந்தது .. கடைசியா ஜிம் காரி கே கிடைச்சது.. அவர்தான் படத்துல TRUMAN.. அவர் பாட்டுக்கு  அமைதியா அவரு ஆபிஸ் , காரு , அவரு லவ் , நண்பர்கள்  னு  சும்மா திவ்யமா வாழ்ந்துட்டு இருக்கார்..ஒரு நாள் பீச்சுல உட்காந்து பினாதிட்டு இருக்கும் போது, திடுர்னு அவர் தலைக்கு மேல மட்டும் மழை பேயுது.. என்னடா  னு  அவர் ஆச்சர்யமாக அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் அவர்க்கு அவரோட வாழ்கை அவரோடது இல்ல னுதெரிய வைக்குது ..

உலகம் பூரா வெற்றிகரமா , வெற்றிகரமா நா , அப்படி ஒரு வெற்றி கரமா ஒளிபரபாகிற ரியாலிட்டி ஷோ தான் TRUMAN ஷோ .. இந்த ஷோ 24 மணி நேரமும் ஒரு மனிதனோட வாழ்கை யை , அவனுக்கு தெரியாம ஒளிபரப்பும்..இதை வெறி தனமா விடாம பார்கிறவங்க தான் நம்ம ரசிகர்கள் ....   இந்த ஷோ வோட கிரியேட்டர் Ed Harris , இதுக்குனே ஒரு குழந்தைய தத்து எடுத்து , ஒரு ஊரையே செட் போட்டு , எல்லா இடத்திலையும் கேமரா வச்சு , இரவு , பகல் , கடல் , வானம் , காத்து , நேரம் என எல்லாத்தியும் செயற்கையா உருவாக்கி , அம்மா , அப்பா , அவன் சைட்டு , அவளோட பைட்டு , ஊர் மக்கள், நண்பன் என எல்லாத்தியும் நடிக்க வைக்கிற ஒரு பயங்கரமான அறிவாளி ... இவரோட மொத்த TECHNICAL UNIT ம் இருக்கிறது எங்க தெரிமா , அந்த ஊரோட நிலா ல ...ஆமா நிலாவும் செட் தான்...


TRUMAN ஷோ ரசிகர்கள் என்ன எதிர்பார்கிரர்களோ , அதே மாதிரி JIM CARREY யை  அழ வைப்பது , சிரிக்க வைப்பது , கோப பட , பயப்பட வைப்பது  னு   எல்லாமே இவர் சொல்படி நடக்கும் நிகழ்வுகள் தான் ...

TRUMAN அப்பாவை சிறு வயதில் கடலில் இறக்க வைப்பது (அந்த மாதிரி நடிக்க வைப்பது ), இதனால் கடலை கண்டாலே பயம் கொள்ள வைப்பது, மொத்த ஊரையும் PERFECT ஆகா நடிக்க வைப்பது , நிலா செட்டில் உட்கார்ந்து கொண்டு மொத்த உலகத்திற்கும் இதை ஒளிபரப்புவது , கடைசியில் உண்மை தெரிந்து  TRUMAN தப்பிக்கும் முயற்சிகள் எல்லாவற்றையும் தடை செய்வது , கடைசியாக கடல் வழியாக தப்ப முயற்சி செய்யும் போது , புயல் , மழை , பேரலை கலை TECHINICAL  ஆக உருவாக்குவது என இந்த சோவின்  கிரியேட்டர்   ஆக  பின்னுகிறார்  Ed Harris ..

தன் கண்ணீரை கூட க்ளோஸ் அப் இல் பதிவு செய்யும் காமிராக்கள், 24 மணி நேரமும் தன்னை கவனிக்கும் ரசிகர்கள் , தன்னை சுற்றி இருப்பவர் எவர்க்கும் தெரியாமல் தப்பிக்க போடும் பிளான் கள் ,கடைசியில் எல்லோரையும் கண் கலங்க வைத்து விடை பெறுவது என TRUMAN ஆக ஜிம் கேரி யின் நடிப்பு .வாவ் ..ஜிம் காரி கு இந்த படம் மிக பெரிய வெற்றி யையும் , விருதுகளையும்  அள்ளி கொடுத்தது ..

 நினைத்து பார்க்க சாத்தியமில்லாத இந்த கதையை , பிரம்மாண்டமான செட்கள் மற்றும் வேகமான திரைக்கதை மூலம் நம்மை நம்ப வைத்து நம்மை வாய் பிளக்க வைகிறார்கள்... ...

Movie Name : The Truman Show.
IMDB Rating : 8/10.
Genre : Satirical social science fiction comedy-drama.

கொஞ்சம் இப்படி நினைத்து பாருங்கள்... இது நம் கதை தான்.. அந்த Ed Harris Character தான் கடவுள் . அவர் நடத்தும் நிகழ்வுகள் தான் நம் இன்பம் , துன்பம் வாழ்க்கை எல்லாம் .....அப்ப அந்த  TRUMAN யாருனு கேட்கீரீங்களா ..... வேற யாரு பாஸ் ..நானும் ...நீங்களும் தான்....

ப்ப்ப்ப்ப்பாஆஆஆஅ , செம மொக்கை அப்டின்னு பீல் ஆவாதீங்க..




No comments:

Post a Comment