Friday 12 September 2014

இசையின் சரித்திரம் - தொடர்ச்சி

நண்பர்கள் இந்த தொடர்ச்சியின் தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும்..

 எந்த நேரத்தில் விதி தனது விளையாட்டை மைக்கேல் ன் வாழ்க்கையில் தொடங்கியது என எழுதினேனோ , அந்த நேரத்தில் அது சரியாய் என்னிடமும் தொடங்கியதை நான் அறிய வில்லை ...  வாவ்,,, வாட் எ வாரம் ..... ஒரு வாரம் , ஒரு மணி நேரம் மாதிரி பறந்துருச்சு , அத விட்ருவோம் ,அந்த சோக கதைய சொல்லி உங்களுக்கு சுருக்கு வைக்க வேண்டாம் .....

இதன் முதல் பாகத்தை படிக்காத நண்பர்கள் இங்கே க்ளிக் செய்து படிச்டுங்கன்னா ...ஒரு இசையின் சரித்திரம்

நாம ஏற்கனவே பார்த்த மாதிரி நம்ம மைக்கல் , சூரியனுக்கே டார்ச் அடிச்சா மாதிரி , புகழுக்கே புகழ் தேடி கொடுத்து  இசையின் தேவ தூதன் அ  , மக்களின் சந்தோசமா , வாழ்க்கை போயிடு இருந்தது...
அப்ப தான் பெப்சி யோட ஒரு 5 மில்லியன் டாலர் கு ஒரு ஒப்பந்தம் பண்ணிய மைக்கல் , பெப்சி யின் விளம்பர நாயகனா மாறினார், இது வரை  இவ்வளவு தொகை உலகில் எவருக்கும் ஒப்பந்தம் போடப்பட்டதில்லை என்பது இன்றளவும் உண்மை ...

January 27, 1984 - பெப்சி யின் விளம்பர திற்காக தனது குளுவினரடுன் நிகழ்ச்சி யின் பொது Pyrotechnics ( நெருப்பை உமிழும் இயந்திரத்தின் )மைக்கல் இன் முடியில் தீ பிடித்தது , இதனால் அவரது தலையில் இரண்டாம் நிலை காயங்கள் ஏற்பட்டது .. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட மைக்கல் , காயங்களை மறைக்க Rhinoplasty  எனப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் .. இதற்கு இழப்பீடாக பெப்சி கொடுத்த 1.5 மில்லியன் தொகையை , கலிபோர்னியாவின் Brotman  மெடிக்கல் செண்டர் கு தானமாக வழங்கினார். இதன் தொடர்ச்சியாக பெப்சி யின் புதிய ஒப்பந்தம் 1987 இல் உருவாகியது , இதற்க 10 மில்லியன் டாலர்  வாங்கி தனது சாதனையை தானே முறியடித்தார் ..  இதில் ஆறு மில்லியன் டாலர் கலை உலகெங்கிலும் அனாதை குழைதைகளின் மருத்துவ செலவுக்கு கொடுத்தார் ..

சாதனைகள் , உலகெங்கும் ரசிகர்கள் , புகழ் , பணம் என எத்தனையோ இருந்தும் மைக்கல் இன் உடல் கோளாறுகள் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை.எவ்வளவு கொடுத்தாலும் அவரது வளர்ச்சி கண்டு பொறமை தீயில் வெந்த உள்ளங்கள் அவரது உருவத்தையும், தோலின் நிற மாற்றதியும் எள்ளி நகையாடின ... அதை பற்றி எழுதி , பேசி , எள்ளி நகையாடி அவரது புகழை கெடுக்க நினைத்தனர் ,  எல்லோரும் எழுதிய படி அவர் ஒன்றும் புகழுக்காக தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி களினால் தனது உருவத்தை மாற்றவில்லை.. 1979 , ஒத்திகையின் போது கீழே விழுந்து மூக்கு உடைந்ததால் , முதல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், அனால் அதுவே அவருக்கு வினையானது ... ஆம் , சரியாக சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட மைக்கல் அடுத்த 10 ஆண்டுகள் தொடர் சர்ஜரி களினால் மொத்த முகமும் மாறியது , இது போதாது என்று இத பக்க விளைவுகளினால் விடிளிகோ எனும் தோல் நிறம் மாறும் பிரச்னையும் சேர்ந்து அவதி பதுதியது ...இதை ,  இவன் எப்போதடா இவன் விழுவான் , புதைத்து விடலாம் என காத்திருந்த கூட்டம் , இரவும் பகலும் இதை பற்றி எழுதி தள்ளியது .....கொடுமையின் உச்சமாய் இவரை மனிதனாக இருந்து குரங்காக மாறியவன் என்று கூட எழுதியது ...இதை கண்டு மன உளைச்சலில் உறங்காமல் தவித்த மைக்கல் தனது தனது ஒரு பேட்டியில் வருத்தத்தை வெளிபடுத்தினார் .

Why not just tell people I'm an alien from Mars? Tell them I eat live chickens and do a voodoo dance at midnight. They'll believe anything you say, because you're a reporter.
But if I, Michael Jackson, were to say, "I'm an alien from Mars and I eat live chickens and do a voodoo dance at midnight," people would say, "Oh, man, that Michael Jackson is nuts. He's cracked up. You can't believe a single word that comes out of his mouth..


இதை கேட்டு  ரசிகர்கள் அவரை நினைத்து ஏங்கினர்... உடைந்து கலங்கி , கண்ணிர் வடித்தனர் ..உலகமே மைக்கல் ன் இந்த நிலையை நினைத்து  துடித்தது , .அவர் மீண்டும் வர வேண்டினர்...எப்போது திரும்பி வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தனர் அவர்கள் மட்டுமா , இசை கடவுளும் தான் ....

மைக்கல் மீண்டும் வந்தார் ..ஆம் , முன்பை விட அதிரடியாக , அனால் அமைதியாக...  சரியாக 1991 - மைக்கல் சோனி உடன் 65 மில்லியன் டாலர் களுக்கு ஒப்பந்தம் செய்தார்...உலகடையே அடித்து , நிமிர்த்து , துவைத்த தனது எட்டாவது அல்பம் ஆன DANGEROUS   NOV 26 1991 அன்று ரிலீஸ் செய்தார் , அதில் தனது முதல் பாடலை BLACK OR  WHITE என வைத்தார் ..சாதனை , சாதனை என அத்தனை சாதனைகளை நிகழ்த்தியது, அவரை பற்றிய அத்தனை விமர்சனங்களையும்  அடித்து நொறுக்கியது .  DANGEROUS ...

இதன் தொடர்ச்சியாக 1992 ல் JAM, HEAL THE WORLD பாடல்களும் வெளி வந்து பெரும் வரவேற்பை பெற்றன.. அவரது எதிரிகள் கூட அவரை பற்றி பாராட்டி எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்..  அபோது தான் மைக்கல் தன் கனவிலும் நினைத்து பார்க்காத குற்றசாட்டுக்கு ஆளானர் ,
 உலகத்தயே அதிர வைத்த அந்த நாள் ..மே 22 , 1993 ஜோர்டான் என்கிற 13 வயது சிறுவன் மைக்கல் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என வழக்கு தொடர்ந்தான்..இதை தொடர்ந்து மைக்கல் இன் நெவர்லாந்து வீடு 2,700-acre (11 km2) சோதனைக்கு உள்ளானது.. மைக்கல் ம் மருத்துவ சோதனைக்கு உட்படுத்த பட்டார்.. இதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களினால் மிகுந்த மன வேதனை அடைந்த மைக்கல் , தனிமையும் சேர்ந்து அழுத்த போதைக்கு அடிமையானார்.

1994 இல்கடைசியாக  மைக்கல் குற்றவாளி அல்ல என நிருபிக்கபட்டார் ..அதே ஆண்டு Lisa Marie அவரை திருமணம் செய்து கொண்டார் .இதை தொடர்ந்து 1995 ல் HISTORY அல்பம் வெளி இட்டு மீண்டும் சாதனை படைத்தார் .. 2003 இல் மீண்டும் ஒரு குற்றசாட்டுக்கு ஆளான மைக்கல் தன் அத்தனை சொத்துகளையும் விற்று வழக்கை நடத்தி போராடி மீண்டும் தன் எந்த தவறும் செய்ய வில்லை என நிரூபித்தார்.
எப்போதுதேல்லாம் தான் உடைந்து எரிந்து போனாலும் ..மீண்டும் எழுந்து வரும் பெனிழ் பறவை போல..மைக்கல் 2009 இல் தனது அடுத்த ஆல்பத்தின் பெயரை அறிவித்தார்... அது தான் THIS IS IT..பட் அது THAT IS IT ஆக மாறும் என யாரும் எதிர்பார்கவில்லை

உலகமே இந்த அல்பதிர்காக காத்து கொண்டிருக்க , ஜூன் 25 2009 அன்று , இசை, இசை  என்று இசையாகவே வாழ்ந்த மைக்கல் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது ..
இந்த செய்தியை கேட்டு அழாத கண்கள் இல்லை என சொல்லலாம் ,  இண்டர்நெட் ஸ்தம்பித்தது , மைக்கல் பெயரை ஒரு நொடிக்கு 3120 பேர் கூகுளே தேடினர்.. உலத்தின் அத்தனை சேனல் களும் மைக்கல் பாடல்களை ஒளிபரப்பின , செய்தியை நம்புவதை விட , மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதுதான் உண்மை ... மைக்கல் இறந்தார் என்று தேடியவர்களை விட .. MICHEAL IS ALIVE  என்று தேடியவர்களே அதிகம்..  தன் வாழ்க்கை யை வரலாறாகவே வாழ்ந்த மைக்கல் இன் இறப்பும் வரலாறானது.. ஜூலை 7 2009 அன்று அவரது இறுதி சடங்கு Staples Center in Los Vegas நடந்தது....இந்த உலகத்திற்கு அவர் இசையையும் , நடனத்தியும், தன் செல்வத்தையும் தன் அபரிதமான  அன்பையும் கொடுத்திருந்தாலும் , நாம் அவர்க்கு கொடுத்ததென்னவோ  மன வேதனையும் , வலிகளும் தான் ..

ஆக் 29 , மைக்கல் இன் பிறந்த நாள் .....இந்த பதிவே அதற்காக தான்


                                   Showin' How Funky Strong Is Your Fight
                                   It Doesn't Matter Who's Wrong Or Right
                                   Just Beat It, Beat It, Beat It,

                                  BYE....BYE ...Micheal ..No one can replace you. We miss you...

No comments:

Post a Comment