Wednesday 3 September 2014

ஒரு இசையின் சரித்திரம்

இந்த கட்டுரையை ஆரம்பிக்கும் முன் ஒரு கேள்வி , நம்மில் எத்தனை பேருக்கு திறமை இருக்கிறது ....எத்தனை பேருக்கு அதனை செயல்படுத்த கூடிய ஆற்றல் இருக்கிறது ,,.. .. மிக சிலருக்கு தான் என நீங்கள் நினைத்தால் அது தவறு.... நம் எல்லோருக்குள்ளும் திறமையும் ஆற்றலும் இருக்கிறது..  ஆனால் மிக சிலர்தான் அதை உணர்ந்து , அதை மேம்படுத்தி புகழ் பெறுகிறார்கள்...புகழ் ..... சிலருக்கு இது ஒரு வாய்ப்பில் கிடைகின்றது , சிலருக்கு வாழ்கையில் கிடைக்கிறது ..... அனால் மிக சிலர்க்கு தான் அதுவே வாழ்க்கையாக கிடைக்கிறது ..... அப்படி புகழை ஒரு வாழ்க்கையாக வாழ்ந்த ஒரு இசை மேதை பற்றிய பகிர்வு இது ...

1958 - USA -  கறுப்பின மக்களுக்கான உரிமைகள் முழுமையாய் கிடைக்காமல் அவர்களின் வளர்ச்சி மற்றும் முயற்சி தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வந்த ஆண்டு ..  .. அப்போது 7 குழந்தைகளுக்கு தந்தையான  ஜோசப் வால்ட்டர் இன்டியானவில் U.S. Steels  ல் கிரேன் ஆபரேட்டராக அக  வேலை செய்ய ,  மனைவி கத்ரின் Jehovah's Witnesses ல் பியானோ வாசித்தும் , பகுதி நேர பணியாளராக , சொற்ப வருமானத்தில் Sears Departmental Store ல் வேலை  செய்ய , வரும் வருமானம் வாய்க்கும், வயுற்றுக்கும் பத்தாமல் அவர்கள் வறுமையில் வாடியகாலம் அது , அப்போது அவர்கள்
தங்களக்கு பிறக்க போகும் அடுத்த குழந்தை தான் உலகத்தையே தன் வசபடுத்தி, இசையால் மிரள வைக்கும்  போகும்  ஒரு இசை சக்ரவர்த்தி என்று நினைத்திருக்க சத்தியமாய் வாய்ப்பில்லை ....அப்படி ஒரு வறுமையில் 1958 ல் பிறந்தவர்.

இந்த வறுமையை மாற்றியது இவர்களின் இசை ...அம்மா பியானோ விலும் , அப்பா கிடார் லும் The பால்கன்ஸ் பேண்ட் இல் வாசித்து குழைந்தைகளை வளர்த்தனர்.... வறுமை , கருப்பர்கள் என்ற கீழ் நிலை ,தந்தை, தாயின் கடின உழைப்பு ,அவர்களின் இசை,தந்தையின் கடுமையான வளர்ப்பு  என இந்த நிலைதான் இந்த குழைந்தையை ஆறு வயதில் மேடை ஏற்றியது..அந்த நிமிடம் , அந்த அரங்கில் இருந்தவர்கள் , இந்த நிகழ்ச்சியை கேட்டவர்கள்.இதை பற்றி எழுதியவர்கள் , பேசியவர்கள் எவரும் இதை உணர்திருக்க வாய்ப்பில்லை ..எதை ??? அடுத்த 44 வருடங்களுக்கு இசை உலகின் சக்ரவர்த்தி, உலகத்தின் எல்லா இடத்தையும் தன் இசையால் ஆக்ரமிக்க போகிறவர் , சொல்ல போனால் இசையின் தேவ தூதன் இவர் தான்என்பதை ....  அந்த  44 வருடங்கள் உலகின் அத்தனை மேடைகளும் இவர் கால் பட வேண்டி துடித்தன,,, ஆறு வயதில் துவங்கிய இவரது  இசை பயணம் , 50 வயதில் இவர் இறக்கும் வரை ஓயவே இல்லை .... ஏன் , இவர் இறந்த பின்னும் ஓயவில்லை என்பது தான்உண்மை ... முதன் முதலில் வெளிவந்த இசை தகடு முதல் ..முந்தா நேத்து வெளி வந்த Invisible MP3 பிளேயர் வரை இவர் பாடல் இல்லாத இடம் இல்லை .....
 நாடு , மொழி, இனம் , நிறம் , மதம், இடம் , கலாச்சாரம் , ஏழை , பணக்காரன் என எந்த வேறுபாடும் இல்லாமல் , இசை கேட்டவுடன் , மகிழ்ச்சியில் திணறி , துள்ளி குதித்து , கண்களில் கண்ணீர் வழிய மொத்த உலகமும் சத்தமாக உச்சரித்த ஒரு பெயர் ........ மைக்கேல் ..........

ஆம் , அவர் தான் மைக்கேல் ஜாக்சன் ..... கிங் ஒப் போப், ஈடு இணையில்லா இசை உலகின் சக்கரவர்த்தி ....
தனது தந்தையிடம் பிரம்பில் அடி வாங்கி ,  FAT NOSE , FAT NOSE என்று அவரிடம் திட்டு வாங்கி , மனதாலும் உடம்பாலும் வலியுடன் அவரது சிறு வயது வாழ்க்கை இருந்த போது தான் , ஆறு வயதில் தனது சகோதரர் களின் ஜாக்சன் 5 குழுவில் மேடையேறிய மைக்கேல் தனது தனது தொடர் முயற்சியால்  14 ஆவது வயதில் (1972) தனி ஆல்பம் " Got to be There" யை வெளி இட்டார் .. இது USA ல் மட்டும் 9 லட்சம் , உலக அளவில் 3.2 மில்லியன் காப்பிகளும் விற்று சாதனை புரிந்தது.


இதன் வெற்றியை தொடர்ந்து BEN (1972), மியூசிக் அண்ட் மீ (1973), For Ever மைக்கல் (1975) விற்பனையில் சாதனை படைத்தன...

ஒவ்வொரு நாடுகளிலும் 1970- 80 களின் இசை யானது ஒரு தர மக்களயே திருப்தி செய்பவையாக இருந்தது , பொதுவாக மேலை நாடுகளில் ராக் வகை ராக்கி கொண்டுருந்த சமயம் அது ...அப்போது இசை உலகில் மைக்கல் பாடல்கள் புயலென நுழைந்து போப் பாடல்களாக மக்களுக்கு ஒரு புதிய உணர்வையும் , உற்சாகத்தையும் தந்தன.. மக்கள் உடனடியாக மைக்கேல் ஐ இசை நாயகனாக ஏற்ற்று கொள்ள ஆரம்பித்தனர்..
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை மைக்கேல் வெளிபதுதி கொண்டுஇருந்தர் ..

மைக்கல் இன் பொற்காலம் என்று சொல்வதை விட உலக இசையின் பொற்காலம் என்று 1980-1990 ஐ சொல்லலாம் , இந்த ஆண்டுகள் தான்  மைக்கேல் புகழ் ஏணியில் ஏற்றி அதை விண்வெளி வரை பரவ செய்த காலம்,, ஆம் , 1982  -  உலகத்தையே இசையால் மிரட்டி அத்தனை இசை சாதனை களையும் உடைத்து , இசை , நடிப்பு , ஸ்டோரி என அத்தனை அம்சங்களும் கொண்ட ஒரு இசை ஆல்பம் வெளி வந்தது - அது தான் த்ரில்லர் ,,
 நிறைய சாதனைகள் இந்த ஆல்பம் படைத்தது என்று சொல்வதை விட , இந்த ஆல்பம் படைக்காத சாதனைகளே இல்லை என சொல்லலாம்..  13 கிராமி , 8 அமெரிக்க மியூசிக் விருதுகள் ,  மிக சிறிய வயது சாதனையாளர் விருது என விருதுகளை வாரி குவித்து  .இரண்டு முறை கின்னஸ் ல் இடம் பெற்றார்  மைக்கேல்.. இந்த பாடல்களை அதிகம்  ஒளி பரபியே MTV புகழ் அடைந்தது ... இன்று வரை உலக அளவில் அதிகமாக விற்ற சாதனை ..இந்த ஆல்பதிற்கே சேரும்.. 65 மில்லியன் காப்பிகள் விட்ருள்ளன..

 "In the world of pop music, there is Michael Jackson and there is everybody else - Newyork times

"Thriller stopped selling like a leisure item—like a magazine, a toy, tickets to a hit movie—and started selling like a household staple" - J. Randy Taraborrelli 

March 25, 1983 -  மைக்கேல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.. அன்று தான் சகோதரர்களோடு மீண்டும் இணைந்து Pasadena Civic ஆடிடோரியம் தில் தான் முதல் லைவ் பெர்போர்மன்சே நிகழ்த்தினார்... சரியாக சொல்வதனால் அவரது Signature Move களான மூன் வாக் , Circle Slide மற்றும் The Spin ஐ  பார்வையாளர்கள் முன் நிகழ்த்தி காட்டினார்..இதுவரை இந்த  Signature Mov வே பார்த்திராத உலகம் , மைக்கல் ஐ இசை கலைஞனாக மட்டுமே பார்த்த உலகம் , முதல் முறையாக அவரது நேரடி ஆட்டத்தை பார்த்து வியந்து அழுது அலறி ஆர்பரித்தது..ஒவ்வொரு முறை மைக்கல்  Signature Move செய்யும் பொழுதும் .. மக்கள் உற்சாக மிகுதியில் உணர்ச்சி பெருக்கில் மயங்கி விழ ஆரம்பித்தனர்..
 தனது All time Favorite பிளாக் ஜாக்கட் மற்றும் Diamond rhinestones Glove ..உடன் அவர் தோன்றிய போது மக்களின் பரவசம், அவர்களின் கூச்சல் அவரை படைத்த கடவுளுக்கும் கேட்டிருக்கும் ..
கடவுள் கண்டிப்பாக அப்போது நினைத்து இருப்பார் .. " Michael , You Got to be there "

விமர்சகர்கள், பத்திரிகைகள் இதை பற்றி எழுதி கொண்டாடின..

"There are times when you know you are hearing or seeing something extraordinary...that came that night" - Rolling Stones.

The moonwalk that he made famous is an apt metaphor for his dance style. How does he do it? As a technician, he is a great illusionist, a genuine mime. Michael Jackson went into orbit, and never came down.- Newyork times.

Famous Signature Moves ...

 


இதற்கு பிறகு மைக்கல் ற்கு கிடைத்ததெல்லாம் புகழ்,புகழ், ....புகழ், ......எங்கு சென்றாலும்  புகழ்...  பண மழையில் , ரசிகர் அன்பு முத்தங்களில் நனைய ஆரம்பித்தார் ....

சரியாக ஐந்து வருடங்கள் கழித்து தனது  BAD (1987) அல்பத்தை வெளி இட்டார் .. இதுவும் விற்பனையில் சாதனை என்பதை சொல்ல வேண்டுமா என்ன ...
இதன் பிறகு தொடர்ச்சியாக உலகம் முழுவதையும் தனது லைவ் Performance நிகழ்சிகளால் மகிழ்ச்சியால் கதற வைத்தார் ... மைக்கல் இ அருகில்  பார்ப்பதே இந்த பிறவியின் பயன் என மக்கள் அவர் முகம் பார்க்க ஏங்கினர்... மைக்கேல் கை அசைதாலோ, திரும்பி பார்த்தாலோ , ஏன் வீடு ஜன்னலில் அவரை பாக்கவோ ரசிகர் கூட்டம் அலை பாய்ந்தது...எங்கு போனாலும் புகழ் , எதை தொட்டாலும் பணம் , என்ன செய்தாலும் மக்களின் அன்பு என உயர உயர பறந்தார் ..அப்போதுதான் ஒரு மனிதனாக வாழ்கையின் சம நிகழ்வான துன்பம்  மைக்கேல் யும் விட்டு வைக்கவில்லை ....

விதி தன் விளையாட்டை மைக்கேல் ன் வாழ்கையில்  தொடங்கியது ...

(தொடரும்)

No comments:

Post a Comment