Monday 1 September 2014

Drishyam - Movie Review - The Best Crime Thriller of Malayalam.


என்னடா இவன் எடுத்த எடுப்பிலே மலையாள படத்துக்கு விமர்சனம் எழுதுறான்.... இவன் ஒரு வேலை பாலக்காட்டு மாதவன் நாயரோ நு , இல்லை ஆட்டோகிராப் சேரன் போல அடிவாங்கியவனோ ...என சேட்டாகளும் , சேச்சிகளும் என்னை தவறாக  நினைக்க வேண்டாம் .. மலையாளத்தை பொறுத்தவரை அடியேன் ....பூஜ்யம் என்ற நிலைக்கும் கீழே ...  மலையாளத்தில் இது வரை பார்த்த படங்கள் என எதுவும் இல்லை.... ( சாமி சத்தியமா நான் நல்ல பையன் )

அது ஏன் என்று தெரியவில்லை ... மே பி ..... கதை எப்போதுமே ஒரு வீடுகுல்லியே நடப்பதலோ ,இல்லை ஹீரோ எபோதும் கலர் கலர் லுங்கி கட்டி , கள்ளு கடையே கதி என கிடபதாலோ  ,  இல்லை லால் எட்டா வாகட்டும் , மமூட்டி எட்டா வாகட்டும்  ஒன்னா லாரி டிரைவர் ஆகவோ , இல்லை கண்ணாடி போட்ட கமிசனர் ஆகவோ, இல்லை தாதா வாகவோ , இல்லை வீட்டின் அண்ணனாகவோ ....ஒரு கெட் அப்  கூட இல்லாமல் சட்டையும் , லுங்கியும் , கண்ணாடியும் மட்டுமே மாற்றி மாற்றி  போட்டு நடித்ததாலோ என்னவோ மலையாள திரைப்படங்கள் பார்க்கும் எண்ணம் இது வரை துளிர்க்கவே இல்லை ...... ஆனால் ..மேலே சொன்ன இந்த Template களையும் மலையாள திரைப்படங்கள் மீதான என் தவறான எண்ணத்தையும் , " போடேல்" என்று பின் மண்டையில் அடித்து கலைத்தது  இந்த படம் .......ஆம் , அதுவும் இங்கிலீஷ் Subtitles  பார்த்தே ......
அதற்கு பிராயசித்தமாகத்தான் இந்த படத்திற்கு முதல் விமர்சனம் எழுதிகிறேன் ..

திரிஷ்யம் என்றால் காட்சி (Visual)என்று பொருள் ... "தம்பி திரைப்படம் னாலே காட்சி தான் பா னு கடுப்பாகீதர்கள் "  இந்த தலைப்பின் அர்த்தத்தை இந்த படம் பார்க்கும்போது உணர்வீர்கள் ..

சரி த்ரில்லர் என்ற வகையறாவில் மொத்தமே மொத்தம் நான்கு சப் Genre கள் தான். 1. Psychological . 2 . Crime . 3 . Mystery 4. Erotic  த்ரில்லர் என  நான்கு வகையறாக்கள் இருந்தாலும் , திரைப்படமாக உருவாகும் போது சில திரை  விதி களை வைத்தே திரை படங்கள் உருவாகின்றன . அதுவும் ஒவ்வொரு நாடுகளில் , ஒவ்வொரு மொழிகளில் இந்த த்ரில்லர் படங்கள் உருவாகும் போது மக்கள் மற்றும் கலாசார விசயங்களை , முக்கியமாக நம்பிக்கைகளை கருத்தில் கொண்டே உருவாக்க படும்..

பெரும்பாலான திரைப்படங்கள் நாவல்களில் இருந்தே  உருவாக்கப்பட்டவை .... அது 1915 ல் வெளிவந்த John Buchan ன் தி 39 ஸ்டெப்ஸ் நாவலில் தொடங்கி , 1959 - ல் சைக்கோ ல் பயமுறுத்தி , 2013 ல் வந்த Enemy படம் வரை .. அதனையும் நாவல்களின் பின் புலத்திலேயே உருவானவை ...

முதல் இரண்டு நாவல்களும் , 1935, 1960 ல் த்ரில்லர் களின் முடி சூடா திரைகதை மன்னன் Alfred Hitchcock திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகையே அலற வைத்தவை , இந்த திரைப்படங்களின் அதிரடியான வெற்றி காரணமாக தி 39 ஸ்டெப்ஸ் மற்றும் சைக்கோ படங்கள் , தொடர் பாகங்களாக வந்து கல்லா கட்டின .. எது எப்படியோ  Alfred Hitchcock பேரை டைடிலில் பார்த்தாலே மக்கள் அலற ஆரம்பித்தினர்..அதிலும் சில காட்சிகளுக்கு மக்கள் அலறி அடித்து முன் சீட்டை உதைத்து தள்ளிய காட்சிகளும் உண்டு ...
                                         Infamous shower scene from Alfred Hitchcock's Psycho movie (1960)- 
    The Shining (1980) - famous sequence where Jack sticks his face through the broken door and says, "Here's Johnny!
ஏன் இந்த விசயங்களை எழுதினேன் என்றால் , தமிழில் வெகு சில படங்களே  த்ரில்லர்  சப்ஜெக்ட்  எ சரியாக கையாண்டவை..சப்ஜெக்ட் என்றால் Template அல்ல... ஒரு பங்களா, அங்கே கொடூரமா ஒரு வாட்ச்மேன்.  நைட் சீன் , அங்க ஒரு பேய் ... இல்லேன்னா ஒரு கொலை , நல்ல ஹீரோ அதுல மாட்டிகிறான், எப்டி தப்பிக்கிறான் இல்லை கண்டுபிடிக்கிறான்..இல்லேன்னா டூர் போற நாலு பேரு , OLX ல கோட இல்லாத ஒரு காட்டு வீட்டுக்கு போய் பேய் கிட்டயோ இல்ல சைக்கோ கொலை கரன்கிட்டயோ மாத்து வாங்கி சாகறது , இதெல்லாம்  Template  ..இதுல ஒரு 30000 படம் வந்திருக்கும் ,, சில படங்கள் இந்த  Template  இன் அரம்பமாகவோ , இல்லை வித்யாசமாக எடுக்கப்பட்ட படங்கள்ஆகவோ இருக்கும் , அதே கண்கள் , சிகப்பு ரோஜாக்கள் , நூறாவது நாள் , ஊமை விழிகள் , யுத்தம் செய் ,கடைசியாய் வந்த  பிட்சா வரை இந்த  Template   கொஞ்சம் மாற்றி வெற்றி பெற்ற படங்கள் .. ... ( தமிழ் நாட்டை பொறுத்தவரை மட்டும் )
இந்த த்ரில்லர் சுப்ஜெக்ட் இ கையாள ஒரு நல்ல திறமை அவசியம் , மினிமம் பைசா வசூலிற்காக ஆங்கில படங்களை அட்ட காபி அடித்தோ , இல்லை மேல கூறிய டேம்ப்லடே படம் எடுத்து , மூணாவது நாள் டிவிடி யிலோ , இல்லை 30 வது நாள் கே டிவி யிலோ வரும் படங்கள் தான் அதிகம் ..ஆதலாலேயே இந்த சப்ஜெக்ட்  தொட மசாலா இயக்குனர்கள் விரும்பவதில்லை ...  ஆனால் இந்த படத்தின் டைரக்டர் இதை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்.. லால் எட்டா வின் கால் சீட்டும் , கொஞ்சம் பணமும்  , சில Character களை மட்டும் வைத்து கொண்டு  அட்டகாசமாக ஒரு த்ரில்லர் கதையை எடுத்து இருக்கிறார்.

பாசமான , வாழ்கையை எளிமையாக அதே சமயம் மிக அழகாக வாழுகின்ற ஒரு  குடும்பம் .. நான்காவது வரை மட்டும் படித்து , கேபிள் டிவி பிசினெஸ் செய்து ,வரும் வருமானத்தில் வாழ்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் தன மனைவியுடனும் தன இரு பெண் குழந்தைகளடுனும் ரசித்து வாழும் பாச தந்தை யாக மோகன் லால் ..

அழகான குடும்பத்தை புயலாய் கலைக்கின்றது ஒரு கொலை ..பயந்து பரிதவிக்கும் தன் குடும்பத்தையும் , அடித்து துவைக்கும் போலிசையும் சாதுர்யகமாக சமாளித்து தன் குடும்பத்தை தண்டனையில் இருந்து  காப்பாற்றும் ஒரு சாதாரண மனிதனை பற்றியே கதை இது 

.காலையில் எழுந்தவுடன் எரியும் விளக்குகளை அனைபதாகட்டும் , இரவு கேபிள் படம் பார்த்து விட்டு சைக்கிளில் அவசரமாக வீடு வந்து சேர்வதகட்டும்,  எல்லா பிரச்சனைகளக்கும் திரைபடங்கள் பார்த்து தீர்வு சொல்வதாகட்டும் என மிடில் கிளாஸ் ஜார்ஜ் குட்டி யாக வாழ்ந்து இருக்கிறார் மோகன் லால் , மனைவியாக நம்ம மீனா ,  சரியான நேரத்தில் மாருதி  கார் கேட்பதிலாகட்டும் , தன் பெண் வீடியோ வை பார்த்து கதறி , Delete செய்ய  சொல்லி கெஞ்சுவதிலகட்டும் ... க்ளாப்ஸ் அள்ளுகிறார்.

இந்த படத்தின் மிக முக்கிய Character , IG  கீதா பிரபாகர்...மிடுக்கான போலீஸ் பாத்திரம் , அழகான ஆங்கில உச்சரிப்பு , மகனை காணவில்லை என கவலை படுவதும், மோகன் லாலின் குடும்பத்தை சந்தேக கண்களாலேயே எரிப்பதும் ,அடுத்த அடுத்த விசாரணையை அதிரடியாக நடத்துவதும், மகன் கெட்டவன் என்று தெரிந்தும் எல்லர்முனும் காட்டி கொள்ளாமல் விசாரணையை தொடர்வதும் ,  மகனை புதைத்த இடத்தை தோண்டும் போது தான் IG என்பதை மீறி , ஒரு தாயாக கதறி அழுவதாகட்டும்...  Hats off to Asha Sharath . . ( தெலுங்கு மற்றும் தமிழ் Remake லும்  Yester Year நதியா than  IG  கீதா பிரபாகர்...)
இந்த படமும்  அமைதியாக , பிள்ளைகளை பற்றிய எதிர்கால கனவுகளோடு  வாழும் ஒரு சாதாரண Common Man பற்றிய படமே .. ... கொலை நடந்த அடுத்த நாள் மோகன் லால் செய்யும் காரியங்கள் ,சாட்சியங்களை அவர்களுக்கு தெரியாமலே அவர்களை பொய் சொல்ல வைப்பது ,  விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறிது சிறிதாக வெளிவரும் உண்மை , கடைசியில் புதைத்த பிணம் எங்கே என கண்பிபது வரை ...திரைக்கதை பர பறக்கின்றது....

இந்த படத்தின் டைரக்டர் Jeethu Joseph கு இது ஐந்தாவது படம் ... முதலில் மம்மூட்டி யை இந்த படத்திற்காக அணுகி , கால் சீட்  கிடைக்காமல் மோகன் லால் இ வைத்து எடுத்து இருக்கிறார் .. இதுவரை வெளி வந்த அத்தனை மலையாள சினிமா சாதனைகளையும் முறியடித்து , வசூலில் சாதனை புரிந்தது இந்த படம் ...
நான்காவது வரை மட்டுமே படித்தவனது அறிவை அலட்சியமாக எண்ணி, உண்மை தெரிய , அவனிடமே கை கூப்பி கெஞ்ச வைக்கும் அற்புதமான Crime Thriller .வழக்கம் போல தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்கிறார்கள் ... தமிழில் யார் தெரியுமா .... நம்ம கமல் அண்ட் கௌதமி தான் ......படத்தின் பெயர் பாபநாசம்.....

Verdict  :  Good thriller Worth your time and your family as well......

Rating : 7 / 10.







No comments:

Post a Comment