ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதனும் னுஆரம்பிச்சு , அப்புறம் அட்லீஸ்ட் ஒருவாரத்துக்கு ஒரு பதிவுன்னு முடிவு
பண்ணி , கடைசில ஒரு மாசத்துக்கு
ஒரு பதிவு எழுதி , கடைசியா
இப்ப ஆறு மாசத்துக்கு ஒரு
பதிவு னு வந்தாச்சு,
இந்த இடைப்பட்ட நேரத்தில் உலகம் முழுதும் இருந்து
எனது ரசிகர்கள் ( ஆமா , மொத்தம் ரெண்டு
பேர் ) அடுத்த பதிவு எப்ப
எப்ப னு கேட்டு அழுததன்
விளைவே இந்த முடிவு ..
கடைசியா நம்ம பதிவ
படிச்சு நெஞ்சு வலி வந்தவங்க
, தற்கொலைக்கு முயற்சி செய்ஞ்சவங்க வாழ்கையை
மீண்டும் ரணகள மாக்கவேண்டும்
என்ற உயரிய நோக்கத்தோடு மீண்டும்
பதிவுலகில் என்னை இணைத்து கொள்கிறேன்
....( செத்தம் டா ) , இனி மேல்
நம் பதிவுகள் தொடர்ச்சியாக வெளி வரும் என்பதையும்
மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .
நமது முந்தைய பதிவுகளை போலவே
, இந்த பதிவும் உலகத்தையே அச்ச்சர்யதிலும்
அதிர்ச்சியுலும் அலறவைத்த
நிகழ்வை பற்றி தான்..ஆனால்
கொஞ்சம் மனதை நெகிழ வைக்கும்
நிகழ்வு கூட...
1972 , San Antonio, Texas
8 வயது
ப்ரெண்டா விற்கு அன்று பிறந்த நாள்
, பிறந்த நாளை விட அவளுக்கு
சந்தோஷம் அவளது பாட்டியை பார்க்க
போவது , பிறந்த நாளை கொண்டாட
காரில்அவளது தாய் தந்தையுடன் பிறந்த
நாள் கேக்குடன் சென்று கொண்டு இருந்தாள். அவர்கள் கார் ஒரு பழைய போர்ட் முச்டங் கார் , துருபிடித்து போய் அப்பவோ இப்பவோ என்று ஓடி கொண்டு இருந்தது,கார் Houston ஐ நோக்கி
சென்று கொண்டு இருந்தது..
சென்று கொண்டு இருந்தது..
பிரெண்டா விற்கு இந்த பழைய காரை எப்போது
அப்பா மாற்றுவார் என்ற கடுப்பு வேறு
..
"எப்போது
நிக்கும் என்று காருக்கும் தெரியாது
, அப்பாவிற்கும் தெரியாது" என்ற அவளது மொக்கை
காமெடிக்கு யாரும் சிரிக்காமல் வேகமாக சென்று
கொண்டு இருந்தார்கள்.
San Juan Mission , ஆளில்லா
ரயில்வே கிராசிங் யை நெருங்கும் போது,
திடிரென மக்கர் செய்த சார் ,பயங்கர
சத்தத்துடன் இஞ்சினில் இருந்து புகை கிளம்பி
எப்பொழுதும் போல சார் நிண்டு
விட்டது..இரவு எட்டுமணி , சுற்றிலும்
கும்மிருட்டு , Oh!No என
அல்லாரும் ஒரு சேர கத்த
, கடுப்புடன் அவளது அப்பா காரிலிருந்து
இறங்க முயற்சித்த போது கடவை திறக்க
முடியவில்லை , காரின் முன்பகுதியின் இரண்டு
கதவுகளும் துருபிடித்து ஜாம் ஆகி இருந்தன,
உடனடியாக பின் பகுதியில் இருந்து
இறங்கிய ப்ரெண்ட, கதவை வெளியில் இருந்து
திறக்க முயற்சி செய்தாள்...கீழே
பார்த்த ப்ரெண்டா அப்போதுதான் விபரீதம்
புரிந்தது, அதிர்ச்சியில் அவளது அப்பாவை பார்த்து
கத்தினாள்.
"Dad, We're stuck on the tracks "
காரின்
முன் பகுதி ரயில்
டிராக் இன் மேல் நிண்டு
கொண்டு இருந்தது, கலவரமான அவளது தாயும்
தந்தையும் உள்ளிருந்து கதவை திறக்க வேகமாக
முயற்சி செய்தனர் .பிறகு உடைக்க
முயற்சி செய்தனர் , ..முடியவில்லை... அப்பொழுது தான் காரின் மேல்
சிறு வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது.. ஆம்
, நீங்கள் நினைப்பது சரிதான் , டல்லஸ் நோக்கி செல்லும்
அதி விரைவு ரயில் இவர்களை
நோக்கி மிக சில தூரத்தில்
வந்து கொண்டு இருந்தது , முன்
பக்க காரின் கண்ணாடியை உடைக்க
முயன்ற அவரது தந்தை முடியாமல்
போகவே , பலம் கொண்ட மட்டும்
, கைகளில் ரத்தம் வழிய கண்ணடியை
குத்தினார், விரிசல் விட்டதே தவிர
, உடையவில்லை , ரயில் மிக வேகமாக
அருகில் வந்து கொண்டிருந்தது , பதற்றத்தில் மிக வேகமாக காரின் கதவை உதைத்து பார்த்தார் , அது திறக்கவில்லை.. எல்லா
முயற்சிகளும் தோல்வி அடையெ , அவளது தந்தையின் முகத்தில் முதன் முறையாக பய ரேகைகள் படர ஆரம்பித்தன ..தனது
உயிர் இன்னும் சில நொடிகளே
என்பதை உணர்ந்த தாயும் , தந்தையும்
வெளியே பயத்தில் கதறி கொண்டு இருந்த
ப்ரெண்ட வை பார்த்துஅழுது கொண்டேசொன்னார்கள் ...
முதலில்
மறுத்த ப்ரெண்டா , ரயிலின் வேகத்திலும் அதன் ஹார்ன் சத்தத்திலும் பயந்து அழுது கொண்டே
விலகி ஓடினாள்..கண்ணீர் வழிய அவளது
தாய் உரத்த குரலில் கத்தினாள்.
“ Dont Look back honey , Run ..“
ரயில் அதி வேகத்தில் அவர்களை
நெருங்கி கொண்டு இருந்தது உயிரின்
கடைசி நொடிகளை உணர்ந்த அந்த
தம்பதி , ஓடி கொண்டு இருந்த
ப்ரெண்டா வை பார்த்து கடைசியாக கடவுளை நோக்கி வேண்டினர்
...
“ Oh Jesus, Save our baby,We love her “
அதி வேக ரயில்
மோதி கார் சுக்கு நூறாக
சில நொடிகளே இருந்த தருணம்
அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த
அந்த நிமிடம்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
கார் மெதுவாக முன்னோக்கி நகர்ந்தது, தானாக அல்ல, பின்னிருந்து தள்ளப்பட்டு.....ஆனால் சக்கரங்கள் டிராக்ன் மீது ஏறவில்லை, இம்முறை
மீண்டும் பலம் கொண்டு தள்ளப்பட்டது
, மீண்டும் , மீண்டும் , தொடர்ச்சியாக .
முன்பகுதி
சக்கரங்கள் டிராக்கின் மீது ஏறின , இப்பொழுது
முழு வேகத்தில் கார் தள்ளப்பட்டது ..பின்பகுதி
சக்கரங்களும் டிராக்கை கடந்தன,
பேய் வேகத்தில் ரயில் அந்த இடத்தை
அடையும் பொழுது கார் நொடிபொழுதில்
ஆனால் மயிரிழையில் டிராக்கை கடந்தது.ஆச்சர்யத்தில்
உறைந்து போய் இருந்த தம்பதி
திரும்பி பார்த்த போது அங்கே
யாரும் இல்லை ..கார் இன்னும்
நகர்ந்து கொண்டு இருந்தது..சில
அடிகள் தண்டி கார் நின்றது..
கண்ணடியை உடைத்து வெளியேறிய தம்பதி
ரயில்வே டிராக் நோக்கி ஓடிய
தம்பதி , அதிர்ச்சியில் வாய் பிளந்தனர். .. அங்கே
யாருமே இல்லை ...நம்ப முடியாமல் தொடர்ந்து
ஓடிய அவளது தந்தை அருகில்
இருந்த ஒரு வீட்டின் கதவை
தட்டினார்...
கதவை திறந்த ஒரு வயதானவரிடம்
நடந்ததை கூறினார்...பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட அவர் , கடைசியாக
சிறிது கொண்டே சொன்னார் " அவர்கள்
எப்பொழுதுமே நமக்கு உதவுபவர்கள் தான்
".....
ப்ரெண்டா
வின் தந்தை
பதற்றத்துடன் கேட்டார் .."யார் அவர்கள் "
“ They are the Ghostly Children of San Antonio” He whispered...
1950 ல்
ஒரு பழுதான பள்ளி பேருந்து
அதே இடத்தில நின்று போக
ரயில் மோதியதில் , பேருந்தில் இருந்த 10 முதல் 14 வயது குழைந்தைகள் அனைவரும்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்..இந்த சம்பவம் இந்த
பகுதியையே சோக மயமாக்கியது... ஆனால்
அதன் பிறகு எந்த கார்
அங்கு வந்து நின்று போனாலும்
, தானாக நகர்ந்து பத்திரமாக மறுபுறம் சென்று விடும் என்பது
தான் இவர்கள் நம்பிக்கை... அதுவே
நடப்பதும் கூட...
இதற்கும்
மறுபுறம் சற்று மேடான உயரமான
பகுதி , நன்றாக செல்லும் கார்களே
அந்த பகுதியை கடக்கும் போதே
நல்ல வேகத்தில் போனால் மட்டுமே கடக்க
முடியும் , அதனால் நின்ற போன
கார்களை தள்ளுவது என்பது சாதாரணமான காரியம்
அல்ல .
அனால் கார்கள் தானாக நகர்கின்றன,
இப்பகுதி மக்கள் ஏன் இங்கு
வரும் அனைவருமே இறந்த குழைந்தகளே கார்களை
பதுகாப்பாக தள்ளுகின்றன என நம்புகின்றனர். இதை
சோதனை செய்ய இன்றும் இங்கு
மக்கள் அவர்கள் கார்களை நிறுத்தி
சோதனை செய்கின்றனர். அத்தனை கார்களும் மறுபுறம்
தள்ளபடுகின்றன...நம்புங்கள்..
1.அந்த
வழியாக வழக்கமாக செல்லும் கார்கள் எதுவும் நிறுதபடுவதில்லை..
2. சோதனை
செய்பவர்கள் அவர்கள் கார்களை சில
அடிகள் முன்பாக நிறுத்தி , காரின்
கீரை ' நுட்ரல்' செய்து விட்டு இஞ்சினை
அனைத்து விடு கிறார்கள்.
3. சில
நிமிடங்களில் கார் மெதுவாக தள்ளப்பட்டு
பிறகு மித வேகத்தில் மேட்டின்
மேல் ஏறி மறு பகுதியை
பாதுகாப்பக அடைந்தவுடன் நின்று விடுகிறது.
இப்பகுதி
முழுவதும் இது பிரபலம்,இந்த குழைந்தைகளை காக்கும் தேவதைகளாக பார்க்கும் மக்கள் , பஸ் விபத்தில் இறந்த
குழைந்தைகளின் பெயர்களியே அந்த பகுதியின் வீதிகளுக்கு
மக்கள் வைத்துஉள்ளனர் ...
தினமும்
நூற்று கணக்கில் மக்கள் வந்து அந்த
சாலையை ஆக்கிரமதிப்பதால் கடுப்பான அரசாங்கம் வழக்கம் போல இது
பொய் எனவும், ஏமாற்று வேலை
எனவும் அங்கு மக்கள் கூடுவதை
தடை செய்ய ஆரம்பித்தது..
உலக தொலைகாட்சிகள் மற்றும் பத்திரிகைகள் இதை
பற்றி விவாதிப்பதை, சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதை கண்ட அரசாங்கம் இதை
பொய் என நிரூபிக்கும் முயற்சிகளில்
இறங்கியது..
கை தேர்ந்த நில வல்லுனர்களை இந்த வேலைக்கு அமர்த்தியது,பல விதமான சோதனைகளை மேற்கொண்ட அரசாங்கத்தின் நில வல்லுனர்கள் பார்பதுற்கு இந்த இடம் மேடு மாதிரி தெரிந்தாலும் , இது இறக்கம் தான் என்றும், இங்கு ஈர்ப்பு விசை கொஞ்சம் ஜாஸ்தி என்றும் தெய்வ மகன் விக்ரம் மாதிரி மேலே மேலே சொன்னனர்.
கடைசியாக அந்த பாதையை தோண்டி மேலும் சற்று உயரபடுதினர் , இனிமேல் எந்த காரும் தானாய் நகராது என இளக்காரமாய் சிரித்து கொண்டே சொன்னனர்..இதை எல்லாம் பொறுமையாக கேட்ட மக்கள் , கடைசியில் இதை நிரூபிக்க ஒரு முயற்சியில் ஈடுபட்டனர்... அந்த முயற்சியில் ஈடுபட்ட பெண்....வேறு யாரும் அல்ல , இப்போது 45 வயதான தான் ப்ரெண்டா தான்.
Thanks for your time reading this article .
Bye folks
கை தேர்ந்த நில வல்லுனர்களை இந்த வேலைக்கு அமர்த்தியது,பல விதமான சோதனைகளை மேற்கொண்ட அரசாங்கத்தின் நில வல்லுனர்கள் பார்பதுற்கு இந்த இடம் மேடு மாதிரி தெரிந்தாலும் , இது இறக்கம் தான் என்றும், இங்கு ஈர்ப்பு விசை கொஞ்சம் ஜாஸ்தி என்றும் தெய்வ மகன் விக்ரம் மாதிரி மேலே மேலே சொன்னனர்.
கடைசியாக அந்த பாதையை தோண்டி மேலும் சற்று உயரபடுதினர் , இனிமேல் எந்த காரும் தானாய் நகராது என இளக்காரமாய் சிரித்து கொண்டே சொன்னனர்..இதை எல்லாம் பொறுமையாக கேட்ட மக்கள் , கடைசியில் இதை நிரூபிக்க ஒரு முயற்சியில் ஈடுபட்டனர்... அந்த முயற்சியில் ஈடுபட்ட பெண்....வேறு யாரும் அல்ல , இப்போது 45 வயதான தான் ப்ரெண்டா தான்.
ப்ரெண்டா
வின் யோசனயை கேட்ட வல்லுனர்கள்
, சிறுபிள்ளை தனமான யோசனை என்று
கேலி செய்தனர் ....அனால் ப்ரெண்டா தனது
யோசனையை செயல்படுத்த தொடங்கினார்...
ஒரு நாள் இரவில் காரில்
வந்த ப்ரெண்டா சரியாய் அந்த இடத்தில
சில அடிகள் தள்ளி காரை
நிறுத்தினாள்.காரில் இருந்து இறங்கிய
ப்ரெண்டா எல்லோர் முன்பும் குழைந்தைகள
உபயோகிக்கும் பேபி பவுடர் ஐ
காரின் பின் பகுதி முழுவதும்
கொட்டி விட்டு ..மெதுவாக இறங்கி நடந்து
சென்று மக்களுடன் நின்று கொண்டாள்...ஒரு
மணி நேரம் எதுவும் நடக்க
வில்லை,
இதை கண்ட நில வல்லுனர்கள்
சிரித்து கொண்டே ப்ரெண்டா வையும்
மக்களின் நம்பிக்கையும் கேலி செய்ய ஆரம்பித்தனர்
..காரை எடுத்து கொண்டு உடனடியாக
ஓடி விடும் படி கிண்டல்
செய்தனர்..
பொறுமையிழந்த
ப்ரெண்டா காரை நோக்கி நடக்க
ஆரம்பித்தாள்...அப்பொழுது தான் அத்தனை ஏளன
சிரிப்பு சத்தங்களையும் தாண்டி , குழந்தைகள் பேசும் சத்தம் மெதுவாக
ப்றேண்டாவிற்கு கேட்டது.....காரை பார்த்த ப்ரெண்டா
மெதுவாக திரும்பி மக்களை
பார்த்து சிரித்தாள்....
"என்னம்மா
திடுர்னு லூசு மாதிரி சிரிகிறே,
நீ இன்னும் கிளம்பலே" என்று
கேட்டுகொண்டே முன்னே வந்த ஒரு
நில வல்லுனன் அதிர்ச்சியில் உறைந்து போனான்....
கார் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது .... இம்முறை
கொஞ்சம் மெதுவாக கிராசிங் ஐ
கடந்து மறுபுறம்
சென்று நின்றது...ஓடி போய் காரின் பின் பகுதியை பார்த்த மக்கள்
கண்ட காட்சி இது தான்
...
.
10க்கு
மேற்பட்ட கை தடங்கள் அங்கு
தெரிந்தன , அனைத்துமே 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவரின் கை தடங்கள்...என்னை
பொறுத்தவரை அது குழந்தைகளின் கை
தடங்கள் இல்லை , தேவைதகளின் கை
தடங்கள்...
பிரெண்ட்ஸ் ..நீங்களே
முடிவு செய்யுங்கள் , இது அறிவியலா இல்லை
அமனுஷயமா என்று ...
Google key Words : San Antonio Railway crossing Mystery
Thanks for your time reading this article .
Bye folks
No comments:
Post a Comment