Saturday 31 January 2015

Very Funny - ROFL Jokes

1.Money can't buy happiness, but its more comfortable to cry in a BMW than on a bicycle.

2.Forgive your enemy, but remember that idiot's name:D.

3.Help a man when he is in trouble and he will remember you when he is in trouble again. 

4.Many people are alive only because its illegal to shoot them.

5.Alcohol doesn't solve any problem,but neither does juice***.

6.Smoking kills, but if you don't smoke, doesn't mean you'll never die!!!.

7.One day my wife's credit card got stolen.. what a relief it was to find that the thief spends less than my wife!

8.Me and my wife lived happily for twenty years.... then we met.

9.If you want your wife to listen to you, then talk to another woman; she will be all ears.

10.She ran after the garbage truck, yelling, “Am I too
late for the garbage?”
Following her down the street I yelled, “No, jump in"..

11.We always hold hands. If I let go, she shops.


Tuesday 20 January 2015

மனைவியிடம் பேசுங்கள் - அற்புதமான பதிவு

சமிபத்தில் படித்த பதிவுகளில் மனதை நெகிழ வைத்த மிக சிறந்த பதிவு இது ...

மனைவியிடம் பேசுங்கள்

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.

அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.

ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.

பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.

எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.
மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு, செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலேயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்திலேயே பிள்ளையை காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக் காண வருவோர் அதனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி;
பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.

இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது.

நேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே!

காலம் கடந்து பயன்படுத்தினால் பயற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுத்தாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.

இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே!

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைந்ததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தால் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........

இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார்.

நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குறிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயணிப்பவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.

தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.

என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைக்காமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்

உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிறபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கீகாரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

என் வேதனை,
நான்படும் துயரம்
வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம்
அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின்
நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............



இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

மனைவியிடம் பேசுங்கள் - தயவு செய்து பேசுங்கள்

-

- திருச்சி சிவா, தி.மு.க

Friday 9 January 2015

பிசாசு - விமர்சனம்

திரைப்படங்களை பொறுத்தவரை சிலருடைய படைப்புகள் மனதில் நீங்காத ஒரு மென் சோக வலியை உருவாக்கும், அதன் பாதிப்புகள் மூன்று நான்கு நாட்களுக்கு இருக்கும் ,அவை அனைத்தும் முதல் முறை ஓகே , இரண்டாவது முறை ஏற்று கொள்ளலாம் , தொடர்ச்சியான அதே முயற்சிகள் படு தோல்வியை தழுவும்.. உதாரணம் .. பாலா..தனது முதல் படமான சேது வில் ரசிகர்களை கட்டி போட்டு முதல் முறையாக மர்பிட் பீல் என்ன என்பதை உணர வைத்தார் .. அனால் தொடர்ச்சியாக இதே மோர்பிட் பீளை இவர் படங்களான நந்தா, பிதாமகன் , அவன் இவன் என ரசிகர்களுக்கு தர.. எவனோ ஒருவன் க்ளிமக்ஸ் இல் சாவபோகிறான் என்பது பேர் போடும் போதே நமக்கு திட்டவட்டமாக தெரியும் , அது மூக்குபொடி போட்டா ( நந்தா ) இல்லை சாக்கு மூட்டைல கட்டிய (பிதாமகன்) இல்ல மரத்தில தொங்க விட்டா ( அவன் இவன் ) என்பது தான் டைரக்டர் ட்விஸ்ட் .

.படம் பாத்துட்டு வெளியே வந்ததும் எவன் கழுத்தை கடிச்சு கொதறலாம் நு இருக்கும்..வீட்டுல எளவு விழுந்த மாதிரி  ஒரு நாலைஞ்சு நாள் தூக்கமே வராம மூஞ்ச தூக்கி வைச்சு திரிவோம்..அனா யாரு கேட்டாலும் ..சான்சே இல்ல மச்சி .. உலக சினிமா .. உலக டைரக்டர் நு உளறி வைப்போம் ....அனால் இந்தவொரு காட்சியைடும் வலிந்து திணித்து , வேண்டுமென்றே கதையில் ரத்தம் புகுத்தி , கதாபாத்திரங்களை அடித்து கொன்று ரசிகர்களை அழ வைத்தால் அது உலக சினிமா இல்ல.. காட்சிகள் நகர , நகர , சம்பவங்களின்  பாதிப்பை சரியான நடிப்பு மூலம், மனதை உருக்கும் வசனங்கள் மற்றும் சரியான உச்சரிப்பு மூலம், வலிந்து திணிக்கும் சோகம் இல்லாமல் , ஒரு படமோ , அல்லது ஒரு காட்சியோ  மொத்த பார்வையாளர்களின் சப்த நாடியையும் ஒடுக்கி , மூச்சு சத்தத்தை தவிர எந்த சத்தமும் கேட்காத ஒரு அமைதியை உருவாக்கினால்..பக்கத்துக்கு சீட்டு விகர் பார்க்கும் என தெரிந்தும் கண்ணில் கர கர வென்று கண்ணிர் வர வைத்தால்..அது தான் உலக சினிமா ..

அந்த காட்சியோ , இல்லை படமோ முடிந்து சரியாக , மிக சரியாக  ஆறு  நொடிகள் கழித்து..அதிர்ச்சியில் இருந்து மீண்டு பார்வையாளர் மொத்த பேரின் கை தட்டலில் வான் பிளந்தால் .... அதாண்ட படம் ... அவன் தாண்ட டைரக்டர்..ஏன்..ஒரு டைரக்டர்கும் , நடித்தவற்கும் ரசிகன் தரும் மிக உயர்ந்த அளவிட முடியாத கவுரவம் , விருது , பரிசு எதுவெனில் ..அவன் கண்ணிருடன் கலந்த கை தட்டல் தான்...அந்த மாதிரி ஒரு காட்சி பிசாசு படத்தில் உள்ளது ... ( ஒரு காட்சி மட்டுமே , மொத்த படமும் அல்ல )..மிஸ்கின் உலக சினிமா முயற்சியை இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்..சபாஷ் , வாழ்த்துகள் ..

ஆனா மிஸ்கின் அங்கிள் ட சில டௌப்ட்ச் கேட்கலாம்னு ...தப்பா இருந்தா மன்னிச்சுருங்க..கோபப்பட்டு கழுத்த கடிசிராதீங்க .. என்னா பிசாசு படம் தயாரிப்பு பாலா அங்கிள் ..ஆமா ..

1. ஏன் உங்க எல்லா படத்திலும் , ரொம்பபபப நீளமா காட்சிகள் இருக்கு.. அதும் சாதாரண குளிகறது, துணி மாத்தறது இதுக்கெல்லாம் எதுக்கு இவ்ளோ பெரிய லாங் சோட்ஸ.

2.எதுகுனே புரியாம ஏன் எல்லாரும் தலைய தொங்க போடுகறாங்க.
.
3.ஆர்டிஸ்ட் கால்சீட் வாங்கிட்டு ஏன் அவன் மூஞ்ச காட்டாம , காலை மட்டும் காட்றீங்க.
4. சண்டைல ஏன் ஒவ்வொருத்தனா வந்து அடி வாங்குறாங்க..
5. ஏன் அல்லாரும் ரொம்ப லேட்டா ரியாக்ட் பண்றாங்க (நிமிர்வது , குனிவது , திரும்புவது, ஓடறது )
6. இந்த படத்தில ஹீரோ ஏன் பிசாசை விட அதிகமா முடி வச்சிருக்கார்..கடைசி வரை அவர் முடி தெரிஞ்சதே தவிர ..மூஞ்சி தெரியவே இல்ல ..
7. படம் முழுக்க ..படத்துக்கு தேவை இல்லாத, சம்பந்தமே இல்லாத குறியீடுகள் படம் முழுவதும் இருக்குது.. (தண்ணி குடம் ஒழுகுவது, அட்டை பூச்சி ஊர்வது , ஆயா முறைச்சு முறைச்சு பார்ப்பது )
இதை தயவு செய்து களாய்பதாக நினைக்க வேண்டாம் .. ஒரு நல்ல படத்தில் , இந்த கிலிசே காட்சிகள் அதன் தரத்தை பார்வையாளனை உணர வைபதில்லை .. மாறாக எரிச்சல் படுத்துகின்றன .. இவர் படம் இப்படி தான்ய..ஒன்னும் புரியாது ..ஆனா நல்லாருக்கும் என சொல்ல வைக்கின்றன. அந்த ஆதங்கத்தில் தான் இத்தனை கேள்வி ..சரி ..விமர்சனத்துக்கு வருவோம் .. சில படங்களுக்காக நாம் நம்மை தயார் செய்து கொள்வோம் .. அப்படி நான் என்னை என்ன ஆனாலும் சரி ..பயபடாதே என தயார் செய்து கொண்டு சென்ற படம் ..பிசாசு ... ஆனால் படம் முடிந்து வெளி வருகையில் என் கண்ணில் இருந்த நீர் துளிகளே படத்தின் வெற்றி ..
ஒரு பெண் வாகன விபத்தில் அடி படுகிறாள்.. அவளை காப்பாற்ற போராடும் ஹீரோ ..முயற்சி பலனளிக்காமல் அவள் இறக்க, அவள் நினைவாக இருந்த ஒற்றை செருப்பை அவன் வீட்டுக்கு கொண்டு வர ....வந்தது வினை ...அவன் வீட்டில் பேயாக அவள் வாழ்கிறாள்..இது அனைத்தும் நடப்பது படத்தின் முதல் 15 நிமிடங்களில்..அடுத்து நாம் பேய் என்னவோ செய்ய போகிறது என நினைத்தால் ...பீலிங் ஹீரோ ..பிச்சைகாரர்கள் , பீர் பாட்டில் என திசை மாறுகிறது ..அடுத்து வருபவை எல்லலாமே வள..வள ..கொழ, கொழ தான்.. போச்சு ..நம்ம கொடுத்த காசு போச்சு ..என நினைக்கும் போது தான் ..அந்த பெண்ணின் தந்தையாக ராதாரவி அறிமுகம்..தன மகள் தான் பேய் என தெரிந்து உருகி , அழுது, பின்னால் பொய் கொஞ்சும் அந்த அப்பன் பாசம் ..பின்னீடீங்க சார்.. கிரேட்..இந்த காட்சி தான் நான் மேலே சொன்ன கை தட்டல் காட்சி ... அட்டகாசம்..அதற்கு பின் மிஸ்கின் வழக்கமான Tough ட்விஸ்ட் with சிம்பிள் நாட்..அப்புறம் கிளைமாக்ஸ்..அப்புறம் ஆடியன்ஸ் கை தட்டல் என படம் முடிகிறது..
பிசாசு வரும் கட்சிகளில் கிராபிக்ஸ் அண்ட் மகிங் அருமை .கொரிய மற்றும் ஹாலிவுட் படங்கலகு நிகரான மேக் அப் பிசாசின் நகர்வுகளில் கேமரா டிராவல் புது முயற்சி .....பயந்து தூக்கத்தை கெடுக்கும் பேய் படங்கள் ஒருவகை.. சிரிக்க வைக்கும் பேய் படங்கள் மற்றொரு வகை... அனால் பயத்தையும் , பாசத்தையும் , காதலையும் கலந்து கட்டி ஆடிய இந்த பிசாசு புது வகை ...கண்டிப்பா பாருங்க .. நல்லாருக்கும்..


அறிவியலும் அமானுஷ்யமும் - பாலைவன ஸ்ரீ சக்ரம்

உலகெங்கிலும் இருந்து பாராட்டும் ,பேராதரவும்  அளித்து வரும் வாசக நண்பர்களே..( அடப்பாவி )..எப்ப அடுத்த கட்டுரை , எப்ப , எப்ப னு ஏங்கி தவிக்கும் அன்பர்களே ...உங்கள் மனக்குறை புரிந்து உங்களை இதற்கு மேலும் காத்திருக்க வைக்காமல் உடனடியாக கழுத்தறுக்க ...சாரி கருத்து தெரிவிக்க வந்துவிட்டேன் ,,கடைசியா பதிவெழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன ( ஆ..அப்டியே எழுதிட்டாலும் )...என்ன எழுதுலாம் என்று யோசிச்சு யோசிச்சு கடைசில பிரேசில் நாடுகளில் இருந்து கிடைக்கும் அற்புத தைலம் எருவாமேட்டின் அ தலைல தேச்சது தான் மிச்சம் ..சரி சனி பெயர்ச்சி நேத்து தான் ஆச்சு... நம்ம உடனே ஒரு கட்டுரை எழுதி  வாசகர்களோட துன்பத்துக்கு தூபம் போடுவோம் னு நினைச்சப்ப கிடச்சுதுதான் இந்த விஷயம் .. உடனே இதோ கட்டுரை எழுத ஆரம்பிச்சாச்சு..( செத்தம்டா..இதுக்கு சனி பெயர்சியே பர்வாலே)...
இந்த விஷயத்தை எழுதும் முன் ஒன்றை இங்கே தெளிவு படுத்தி விடுகின்றேன் .. இது மதம் சார்ந்தோ , கடவுள் சார்ந்தோ , யாருக்கும் ஆதரவு தெரிவித்தோ எழுதப்பட்ட கட்டுரை அல்ல .. இந்த மாதிரி சம்பவங்கள் உலகில் நடந்துள்ளன , இன்றும் நம் முன் சாட்சியங்களாய் இருகின்றன .. இது மனித அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை தெரிவிக்க மட்டுமே , இது உண்மையா.. இல்லை உட்டாலக்கடி யா என்பதை அறிஞர் பெருமக்கள் ஆகிய தாங்களே முடிவு செய்யவும் ..
அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தின் ஸ்டேன்ஸ் மலைகளின் தென் கிழக்கில் உள்ள இடம் தான் மிக்கி பேசின்..இங்க நிலவும் கடுமையான வெப்பம் இந்த பகுதியில எந்த பய புள்ளையும் நெருங்க விடுலை .. வான் வழியா மட்டுமே இந்த பாலைவனத்தை கடக்க முடியும் ..இப்படி ஒரு காஞ்சு போன பகுதிய பில் மில்லர் ன்ற விமான படை விமானி (Pilot in the Idaho Air National Guard )August 10, 1990 ல அவரோட க்ளிடர் விமானத்துல கடக்கும் போது பார்த்தது தான் இந்த விசயத்தை உலகுக்கு தெரிய படுத்துச்சு ...

அவர் பார்த்தது ..சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு (13.3 மைல்) சதுர அளவுல வரைபடம் மாதிரி குறுக்கும் நெடுக்கும் கோடுகளால் வரையப்பட்ட ஒரு குறியீடு.. அதுவும் சுமார் 9000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இதன் முழு வடிவமும் தெரியும் ...

பார்த்த வுடனே  நம்ம மில்லர் ..என்னடா இது ரெண்டு பெக் இன்னிக்கு ஜாஸ்தி ஆயுடுச்சா.. இல்ல மூணு பட தனுஷ மாறி நமக்கு மூளை கலங்கிடுச்சா நு பீல் ஆகாம உடனே படை தளத்துக்கு திரும்பி , இதை பற்றி ஒரு விசாரணை மேற்கொண்டார் .அப்பொழுது தான் இது வெறும் குறியீடோ , வரைபடமோ அல்ல , இது காலம் காலமாக இந்து சமயத்தில் வழிபடும் ஸ்ரீ சக்ரம் எனபது தெரிந்தது ..

மேலும் விமான படை தளத்தின் ஆரம்ப கட்ட விசாரணையில் இதற்கு முன் அந்த பகுதியில் பயிற்சி மேற்கொண்ட விமானிகள் இந்த சக்ரா வடிவத்தை பார்கவில்லை எனவும் , மில்லர் இதை பார்பதற்கு 2 நாட்கள்  முன்புதான் அங்கே விமான பயிற்சி மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிய வந்தது .. இதனால் அதிர்ச்சியும் ஆச்சர்யமமும் ஒரு சேர , 48 மணி நேரத்தில் யாருமில்லாத , ராணுவ கண்காணிப்பில் இருக்கும் பாலைவனத்தில் எப்படி இவ்வளவு பெரிய சக்ரம் வந்தது என்ற கேள்வி அவர்களை படுத்தியது .. மேலும் 9000 அடி உயரத்தில் பறந்து ஒரு முறை இந்த சக்கரத்தை சுற்றி வருவதற்கு மில்லர் எடுத்து கொண்ட நேரம் 30 நிமிடங்கள்.  23 கிலோ மீட்டர்  தூரத்திற்கு இவ்வளவு துல்லியமாக மணலை தோண்டி , அதுவும் மூன்று அடி ஆழம், இந்த சக்ரத்தை உருவாக்குவது என்பது எந்த மனித சக்தியாலும் சாத்தியமில்லை என்ற உண்மை மட்டும் நன்றாக அவர்களுக்கு நன்றாக உரைத்தது..
முதலில் இது எப்படியோ மனிதர்களால் உருவாக்க பட்டது ..எவனோ காவிரி ஆத்துல மண்ணு அள்ளி மாட்டுனவான் பண்ணுன வேலை .இது முற்றிலும் கப்சா என பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கதறின..அனால் August 12, 1990 Boise TV இதை பற்றிய செய்தியை வெளி இட்டது , செய்தி வெளியானவுடன் இது இந்து மதத்தில் வழிபடும் ஸ்ரீ சக்ரம் மேலும் இது எப்படி அமெரிக்க பாலைவனத்தில் அப்படி தோன்றும் , இது பொய் , அமரிக்காவின் திட்டமிட்ட வேலை எனவும்,  இந்த மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும்  உலகெங்கும் கோட் போட்ட கோபிநாத் கள் பல்வேறு செய்திகளை வெட்டி பேச்சு , விடிஞ்சா போச்சு நிகழ்ச்சியில்  விவாதிக்க தொடங்கினர். இதை பார்த்து கடுப்பான அரசாங்கம் , முறையான விசாரணை மேற்கொள்ள தொடங்கியது..உடனடியாக இந்த பகுதி அமரிக்க ஆராய்ச்சி பகுதி ஏரியா 51 கட்டுப்பாட்டில் வந்தது .. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மண் சோதனை நிபுணர்களால் இந்த பகுதி சோதனை செய்ய பட்டுது ..அனால் எவராலும் இது எப்படி ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடியவில்லை ..வழக்கம் போலவே சில நாட்களுக்கு பிறகு இதை பொய் என்று நிரூபிக்க முயற்சி செய்து முடியாமல் ..கடைசியில் . கொஞ்சம் வயிறு செரியில்லை .இதோ இப்ப வந்துறேன்..னு எல்லாரும் தெரிசிட்டங்கா.. என்னடா சோதனை இது என்று மெரசல் ஆன அரசாங்கம் . சரி இதை நிரூபிக்க முடியாவிட்டால் என்ன , இதே மாதிரி இன்னொரு சக்ரத்தை உருவாக்கி , இது மனிதனால் தான் உருவாக்கப்பட்டது என உறுதி செய்வோம் என அதற்கான முயற்சியில் இறங்கிய போதுதான் ..அந்த அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது ..
ஆம் , இதை மீண்டும் உருவாக்க முடியாது என்பதே அந்த உண்மை .. கட்டிட கலையில் வல்லுநர் குழு , இந்த வடிவத்தை சாதாரண காகிதத்தில் கூட இதை முழுமையாக வரைய முடியவில்லை ..இது ஒருCIPHER என தெரிய வந்தது ..மேலும் இந்த முயற்சிக்கு 75000 முதல் 100000 டாலர்கள் வரை செலவு ஆகும் எனவும் , முழுமையாக 142 நாட்கள் இதை விரைந்து முடிக்க தேவைப்படும் எனவும் ...இவ்வளவி செய்தாலும் , இது துல்லியமான சக்ரமாக இருக்காது எனவும் தெரிவித்தது,
ஆராய்ச்சியாளர்கள் Dr. James Deardorff, a Research Professor Emeritus at the Atmospheric Science Department of Oregon State University மற்றும் அவரது நண்பர்கள் Don Newman and Alan Decker, இதை பற்றிய ஆராய்சியை சவாலாக மேற்கொண்டனர்.. அப்போதுதான் இந்த வடிவம் ஒன்பது உட்கட்டு முக்கோணங்கள் அடங்கியது , அதில் நான்கு மேல் நோக்கியும் , ஐந்து கீழ் நோக்கியும் ( சிவா , சக்தி ) இந்த முக்கோணங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முடிவில் தாமரை இதழ்கள் போன்ற வடிவத்தை உருவாகுவதும் தெரிய வந்தது ..மேலும் இந்த ஒன்பது முக்கோணங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேலும் 28 சிறிய முக்கோணங்களை உருவாக்குகிறது ..இவை அனைத்தும் ஆதார மையமான ஒரு சிறிய புள்ளியில் இருந்தே ஆரம்பிகிறது ..இவை அனைத்தையும் சதுர வடிவ தாந்திரிய வடிவம் காக்கின்றது  என்பதையும் கண்டுபிடித்தனர். இதை மனித முயற்சியால் உருவாக்கவே முடியாது என்பதை தெரிவித்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை .. உடனடியாக இவர்களது ஆராய்ச்சியின் முடிவுகளை பிரிட்டிஷ் பத்திரிகை UFO - Volume 6, # 3 in 1991 under the heading, ‘A Symbol on the Oregon Desert' என்ற தலைப்பில் வெளிஇட்டது.


15 வருடங்கள் விடா முயற்சியாக போராடிய இந்த மூவரும் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு கடைசியில் கண்டு பிடித்த உண்மை .. எல்லாம் தொடங்கும் ஆதார புள்ளி ..பூமி எனவும் , அதை சுற்றி உள்ள ஒன்பது முக்கோணங்கள் 9 கோள்கள் எனவும், மேல்நோக்கிய 12 சிறிய முக்கோணங்கள் சூர்ய மண்டலத்தை சார்ந்த 12 ராசிகள் எனவும் , கீழ் நோக்கிய 16 முக்கோணங்கள் புது நிலவில் இருந்து முழு நிலவாகும் 16 காலங்கள் ( நாட்கள் ) என்பதும் இதை அனைத்தையும் காக்கின்ற தாந்த்ரிய வடிவம் பால்வெளி எனவும் கண்டு பிடித்தனர் ..ஆனால் இதுவரை இந்த சிக்கலான வடிவம் எப்படி அந்த பாலைவனத்தில் உருவானது என்பது மட்டும் கடைசி வரை எவருக்கும் தெரியவில்லை ...அல்லது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை .. இது இயற்கையின் இயல்பாடா , அல்லது மனிதனின் செயல்பாடா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்
இதை பற்றிய விபரங்கள் மற்றும் கட்டுரைகள் –

http://www.labyrinthina.com/sriyantra.htm
http://www.bookofresearch.com/unexplained-mystery-of-oregon-sri-yantra.htm

சரி ரசிகர்கள் .. (ஒ சாரி,)...நேயர்கள் எல்லாருக்கும்  (ஒ மன்னிச்சு ) சரி நண்பர்கள் எல்லாருக்கும் ( இப்ப போதுமா , நம்மளும் ஒரு எழுத்தாளன் அகலாம்ன நடக்காது போல ).. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

மீண்டும் சந்திப்போம் ....

அன்புடன்
ஹரி.